×

தேமுதிகவிடம் தனித்தொகுதியை கேட்டு வாங்கிய அமமுக

சென்னை: தினகரன் செய்தி எதிரொலியாக தேமுதிகவிடம் இருந்த தனித்தொகுதியை டிடிவி.தினகரன் கேட்டுப்பெற்றுள்ளார். அமமுக கூட்டணியில் தேமுதிக 60 தொகுதிகளை பெற்றுள்ளது. அதில் 22 தனித்தொகுதிகளையும், 38 பொதுத்தொகுதிகளையும் தேமுதிகவிற்கு அமமுக ஒதுக்கியது. தமிழகத்தில் உள்ள 44 தனித்தொகுதிகளில் பாதிக்கு பாதி என்ற கணக்கில் தேமுதிகவிற்கு அமமுக கொடுத்துள்ளது. இதுகுறித்து செய்தி நேற்று தினகரன் நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியாக தேமுதிகவிடம் இருந்த கீழ்வேளூர் தனித்தொகுதியை டிடிவி.தினகரன் கேட்டுப்பெற்றுள்ளார். அதற்கு பதிலாக அமமுகவிடம் இருந்த தஞ்சாவூர் தொகுதியை தேமுதிகவிற்கு கொடுத்துள்ளார். இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், அமமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவிற்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அமமுக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தஞ்சாவூர் (174) சட்டப்பேரவைத் தொகுதியை தேமுதிகவிற்கு அளித்துவிட்டு, தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டிருந்த கீழ்வேளூர் (தனி) (164) சட்டப்பேரவைத் தொகுதியில் அமமுக போட்டியிடுவது என பரஸ்பரம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், கீழ்வேளூர் (தனி) – எம்.நீதிமோகன், வாசுதேவநல்லூர் (தனி)- சு.தங்கராஜ் ஆகியோர் வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

The post தேமுதிகவிடம் தனித்தொகுதியை கேட்டு வாங்கிய அமமுக appeared first on Dinakaran.

Tags : Amamaraka ,Demika ,Chennai ,DTV ,Dinakaran ,Amadhatham Alliance ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?