×

மது, கஞ்சா, புகையிலை விற்பனையை தடுக்க தனிப்போலீஸ் குழுக்களின் அதிரடி ‘ஆக்‌ஷன்’ ஆரம்பம்-கடமலை மயிலை பகுதி பெட்டிக்கடைகளில் ஆய்வு அவசியம்

வருசநாடு/தேனி : ‘‘எனது காவல்நிலைய எல்லை போதைமருந்து விற்பனையை முற்றிலும் தடை செய்து விட்டேன்’’ என உங்கள் லிமிட்டில் உள்ள ஒவ்வொரு போலீஸ் இன்ஸ்பெக்டரும் உறுதிமொழி எடுத்து கொண்டால் போதும், அதுவே முதல் வெற்றி. போதைப்பொருள் நடமாட்டத்தை தடுத்து விட முடியும் என போலீஸ் அதிகாரிகளுக்கு போதை ஒழிப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்கினார். அதன்படி, தேனி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்வதோடு 49 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த தொடர் நடவடிக்கைக்கு தேனி மாவட்ட பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.திமுக ஆட்சியில் அடியோடு ஒழிப்புதேனி மாவட்டமானது, மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் தேனி மாவட்டத்தில் கஞ்சா பயிரிடுவதை வழக்கமாக கொண்டிருந்த கிராமங்களாக வருசநாடு மலைப்பகுதி கிராமங்கள் இருந்தன. இதனை கடந்த 2006ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தபோது முற்றிலுமாக ஒழித்தது. நக்சல் தடுப்பு போலீசார் மூலமாக வருசநாடு மற்றும் மலை சூழ்ந்த பகுதிகளில் தீவிரவாத தடுப்புக் குழுவினர் ஆய்வுக்கு செல்லும்போது, காடுகளில் கஞ்சா வளர்க்கப்படுகிறதா என ஆய்வு செய்து அதனை முற்றிலும் ஒழிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன் காராணமாக தேனி மாவட்டத்தில் கஞ்சா பயிரிடுவது அடியோடு ஒழிக்கப்பட்டது.அதிமுக ஆட்சியில் கண்டுகொள்ளவில்லைகடந்த ஆட்சியின்போது, ஆந்திரா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கொள்முதல் செய்து தேனி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு கொண்டு சென்று விற்பனை செய்வது அதிகரித்தது. கேராளவிற்கு கஞ்சா கடத்தும் போது, தமிழக-கேரளா எல்லை மாவட்டமான தேனி மாவட்டத்திலும் கஞ்சா விற்பனை கொடி கட்டி பறந்தது. கஞ்சா விற்பனையானது தேனி மாவட்டத்தில் தேனி, போடி, உத்தமபாளையம், கம்பம், கூடலூர் ஆகிய பகுதிகளில் கொடி கட்டி பறந்தது. இத்தகைய விற்பனையில் அப்போதைய ஆளும் தரப்பினரின் ஆதரவுடன் விற்பனை நடந்ததால் போதை ஒழிப்பு போலீசாரால் துரித நடவடிக்கை எடுக்க முடியாத நிலை தொடர்ந்தது. இதேபோல அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை விற்பனையும் களைகட்டியிருந்தது. பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே இத்தகைய கஞ்சா , குட்கா விற்பனை இருந்ததால் மாணவர்கள் மத்தியில் போதை பொருள் உபயோகிக்கும் பழக்கம் பரவத் தொடங்கியது. இதனை அப்போதைய ஆட்சி கண்டும், காணாமல் இருந்தது.கடந்த 2021ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதும், போதை தடுப்பு பிரிவில் அதிக கவனம் செலுத்தத் துவங்கினார். இதன்காரணமாக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை மீதும், கஞ்சா விற்பனை செய்வோர் மீதும் இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டார். இதன்படி, தமிழகம் முழுவதும் குட்கா விற்பனை மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி, பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.தனிப்போலீஸ் குழுக்கள் அமைப்புதேனி மாவட்டத்தில் நகர்புற பகுதிகளில் கஞ்சா, புகையிலை மற்றும் கள்ளத்தனமாக மது விற்கப்படுவதாக போலீஸ் எஸ்பிக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தடுக்க மாவட்ட போலீஸ் எஸ்.பி பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின்பேரில், நகர்புற பகுதிகளில் உள்ள காவல்நிலையங்களில் சீருடையுடன் கூடிய போலீசாரைக் கொண்ட தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.இதன்படி, தேனி மாவட்டத்தில் நகர்புற போலீஸ் நிலையங்களாக உள்ள தேனி, போடி, உத்தமபாளையம் மற்றும் கம்பம் போலீஸ் நிலையங்களில் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேசனுக்கும் தலா மூன்று பீ்ட்டுகள் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பீட்டிற்கும் 3 போலீஸ் வீதம் ஒரு போலீஸ் ஸ்டேசனுக்கு 3 பீட்டுக்களுக்கு 9 போலீசார் வீதம் 4 போலீஸ் ஸ்டேசன்களில் மொத்தமுள்ள 12 பீட்டுகளுக்கு 36 போலீசார் கண்காணிப்புக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழுவில் நியமிக்கப்பட்ட போலீசார் சீருடையில் சுழற்சி முறையில் முழுநேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இப்போலீசார் தீய நடத்தை உள்ளவர்கள், சந்தேகத்திற்குரிய நபர்களின் நடவடிக்கைகள், கஞ்சா , புகையிலை, மற்றும் கள்ளத்தனமாக மது விற்பனை போன்ற சட்டவிரோத செயல்களை செய்யும் குற்றவாளிகள் பற்றிய தகவல்களை சேகரித்து தேனி மாவட்ட போலீஸ் எஸ்.பி அலுவலகத்தில் உள்ள தேனி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளரான விவேகானந்தனிடம் தகவல்களை அளிக்க உள்ளனர். இப்பணி நேற்று முன்தினம் முதல் தொடங்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.கடமலை மயிலை ஒன்றியத்தை தனிப்போலீஸ் குழுவினர் கவனிப்பார்களா?கடமலை மயிலை ஒன்றியத்துக்கு உட்பட்ட 18 ஊராட்சிகளில் அதிகளவில் பெட்டி கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த பெட்டி கடைகளில் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்பனை அதிகமாக நடந்து வருகிறது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இந்த பகுதியில் தனிப்போலீஸ் குழுவினர் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்கும் கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post மது, கஞ்சா, புகையிலை விற்பனையை தடுக்க தனிப்போலீஸ் குழுக்களின் அதிரடி ‘ஆக்‌ஷன்’ ஆரம்பம்-கடமலை மயிலை பகுதி பெட்டிக்கடைகளில் ஆய்வு அவசியம் appeared first on Dinakaran.

Tags : Kadamalaya Peacock ,Kadamalaya Peacock Area ,
× RELATED கடமலை-மயிலை ஒன்றியத்தில் ரேக்ளா ரேஸ் மாடுகளுக்கு பயிற்சி