×

கூடுதலாக நெல் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது: நுகர்வோர் பாதுகாப்பு நலத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் அடுத்த தச்சூர் கிராமத்தில் தனியார் தொண்டு நிறுவனங்கள் இணைந்து விவசாயிகளுக்கு நெற்களம் அமைத்து விவசாயிகளுக்கு இலவச தார்பாய்களை வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு நலத்துறை செயலாளரான ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கான நெற்களத்தை தொடங்கி வைத்து 50க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச தார்பாய்களை வழங்கினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: கிராமத்திற்கு நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.இன்னும் ஆறு மாத காலத்திற்குள் இந்த கிராமத்தில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  ஒரு சில கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. இதை தடுக்கும் வகையில் நியாய விலை கடைகளுக்கு பொருட்கள் விநியோகம் என்பது இரவு நேரம் இல்லாமல் பகல் நேரங்களில் பொருட்கள் விநியோகிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம். அப்போது தான் தரமற்ற பொருட்கள் இருப்பதை உடனடியாக மாற்றி மாற்று ஏற்பாடு செய்து தரப்படும். ஆகவே இனிவரும் காலங்களில் மக்களுக்கு தரமான பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நெல் கூடுதலாக கொள்முதல் செய்ய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்….

The post கூடுதலாக நெல் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது: நுகர்வோர் பாதுகாப்பு நலத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Consumer Protection Welfare Secretary ,Raadhakrishnan ,Chennai ,Chengalbatu District, ,Bounchur ,Dachur village ,Consumer Protection and Welfare Secretary ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?