×

தமிழகத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் வராமல் தடுக்க 90 லட்சம் தடுப்பூசிகள் தர வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வள துறை அமைச்சர் பர்சோத்தம் ரூபாலாவுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசியின் தேவை மிக அவசரமாக தேவைப்படுகிறது. நோய்வாய்ப்பட கூடிய கால்நடை மந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்கவும், கோமாரி நோய் வரவிடாமல் தடுக்கவும் காலத்தின் கட்டாயமாக தடுப்பூசிகள் உள்ளன. கால்நடைகளுக்கு நோய் வராமல் தடுப்பதன் மூலம் விவசாயிகளின் பொருளாதார இழப்பை தவிர்க்கலாம். 2011ம் ஆண்டில் இருந்து 2019ம் ஆண்டு வரை ஒவ்வொரு 6 மாத இடைவெளியில் கால்நடைகளுக்கு மாநில அரசு தடுப்பூசிக்களை செலுத்தி வந்தது. தமிழகத்தில் இந்த தடுப்பூசிகள் சுமார் 94 லட்சம் கால்நடைகள் மற்றும் எருமை மாடுகளுக்கு வழங்கப்படுகின்றன. தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ், கோமாரி நோய் தொடர்பான தடுப்பூசிகள் ஒன்றிய அரசு வழங்கியதன் அடிப்படையில், 2020ம் ஆண்டு பிப்ரவரியில் 87.03 லட்சம் கால்நடைகள் மற்றும் எருமை மாடுகளுக்கு செலுத்தப்பட்டன. கடந்த முறை 2021ம் ஆண்டு செப்டம்பரில் தடுப்பூசி அளிக்கப்பட்டபோதும், தடுப்பூசி விநியோகத்தில் குறைபாடு இருந்தது. இதுபோன்ற குறைபாடுடன் கூடிய விநியோகத்தினால் தடுப்பூசி செலுத்தி முடிக்க 6 மாதங்கள் ஆகின்றன. அடுத்த கட்டமாக கடந்த செப்டம்பரில் வழங்க வேண்டிய தடுப்பூசி இன்னும் நிலுவையில் உள்ளது. தமிழகத்திற்கு ஒரே தவணையில் 90 லட்சம் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று கடந்த ஜூன் மாதத்தில் இருந்தே ஒன்றிய அரசை கேட்டுக் கொண்டிருக்கிறோம். அவற்றை பெறுவதற்கு இன்னும் காத்துக் கொண்டிருக்கிறோம். எனவே நீங்கள் இதில் தலையிட்டு, கோமாரி நோய்க்கான தடுப்பூசிகள் உடனடியாக தமிழகத்திற்கு அளிக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் கோமாரி நோய் பரவாமல் தடுக்கவும், விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு நேரிடாமல் தவிர்க்கவும் முடியும். தமிழகத்திற்கு ஒரே தவணையில் 90 லட்சம் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று கடந்த ஜூன் மாதத்தில் இருந்தே ஒன்றிய அரசை கேட்டுக் கொண்டிருக்கிறோம்….

The post தமிழகத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் வராமல் தடுக்க 90 லட்சம் தடுப்பூசிகள் தர வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Union Minister ,CM ,G.K. Stalin ,Chennai ,CM. G.K. Stalin ,of ,Animal ,Care, ,Dairying and Fisheries ,Parsotham Rubala ,Union Minister Chief Minister ,B.C. G.K. Stalin ,Dinakaran ,
× RELATED அண்ணாமலைக்கு ஒன்றிய அமைச்சர் பதவி: தமிழக பாஜகவுக்கு புதிய மாநில தலைவர்