×

கத்தார் உலக கோப்பை கால்பந்து 2022: 3வது முறையாக கோப்பையை வென்று சாதிக்க போவது யார்? சாம்பியன்கள் பலப்பரீட்சை

தோஹா: ஃபிபா உலக கோப்பை கால்பந்து தொடரின் பைனலில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணியுடன் முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினா மோதுகிறது. இரு அணிகளும் 3வது முறையாக கோப்பையை முத்தமிட்டு சாதனை படைக்கும் முனைப்புடன் வரிந்துகட்டுகின்றன. கத்தாரில் கடந்த மாதம் 20ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் 22வது உலக கோப்பை  கால்பந்து போட்டி, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.  இன்று நடைபெறும் பைனலில் உலகின் முன்னணி அணிகளான அர்ஜென்டினா (3வது ரேங்க்) – பிரான்ஸ் (4வது ரேங்க்) அணிகள் மோதுகின்றன.நடப்பு சாம்பியனான பிரான்ஸ் 1998, 2018ல் என 2 முறை உலக கோப்பையை வென்றுள்ளது. தற்போது 4வது முறையாக பைனலுக்கு முன்னேறி உள்ளது 2006 பைனலில் இத்தாலியிடம் தோற்று  2வது இடம் பிடித்தது. கேப்டன் ஜிடேனுக்கு கோபத்தை வரவழைக்க  இத்தாலி வீரர் மார்கோ மெட்ரேசி செய்த தந்திரம் பலித்ததால் கோப்பை கைவிட்டு போனது. அதன் பிறகு 2018ல்தான் கோப்பை வென்றனர். இப்போது தொடர்ந்து 2வது முறையும், உலக கோப்பை வரலாற்றில் 3வது முறையும் கோப்பையை கைப்பற்ற ஹியூகோ லோரிஸ் தலைமையிலான பிரான்ஸ் வீரர்கள் காத்திருக்கினறனர்.இளம் வீரர் கிலியன் எம்பாப்பே, அனுபவ வீரர்கள் ஆலிவர் ஜிரவுட், அந்தோனி கிரீஸ்மேன், தியோ ஹெர்னாண்டஸ், ராபால் வார்னே, யூசோப் ஃபோபனா என பலரும் மீண்டும் கோப்பையை முத்தமிட காத்திருக்கின்றனர். அதே சமயம் அர்ஜனெ்டினா கேப்டனும், நட்சத்திர வீரருமான லியோனஸ் மெஸ்ஸி தலைமையிலான வீரர்களும் 3வது முறையாக கோப்பையை வசப்படுத்த வரிந்துக் கட்டுகின்றனர். இந்த அணி 1978, 1986ல் கோப்பையை  வசப்படுத்தி உள்ளது. அதுமட்டுமல்ல 1930ல் நடந்த முதல் உலக கோப்பையிலேயே பைனலில் விளையாடிய பெருமை அர்ஜென்டினாவுக்கு உண்டு. 1990, 2014லும் பைனலுக்கு முன்னேறி 2வது இடம் பிடித்தது. மெஸ்ஸிக்கு இதுவே கடைசி உலக கோப்பை என்பதால் அவரை கோப்பையுடன் வழியனுப்ப அந்த அணியின் இளம் வீரர் ஜூலியன் அல்வாரெஸ் முதல்  நட்சத்திர வீரர்கள் டி பால், மொலினா, டாமைன் மார்டன்ஸ்  என அனைவரும் உறுதி பூண்டுள்ளனர். அவர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் கோடிக்கான ரசிகர்களும்  மெஸ்ஸி உலக கோப்பையை ஏந்தும் தருணத்துக்காக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். பைனலில் 4வது முறையாக விளையாடும் பிரான்சும், 6வது முறையாக விளையாடும் அர்ஜென்டினாவும் 3வது முறையாக கோப்பையை வெல்ல மல்லுக்கட்டும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. ஆனால், வெல்லப்போவது முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவா, நடப்பு சாம்பியன் பிரான்சா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.* பரிசு மழை கத்தார் உலக கோப்பையில் இதுவரை இல்லாத அளவுக்கு மொத்த பரிசுத் தொகையாக ரூ.3586 கோடி வழங்கப்படுகிறது. இது 2018ல் ரஷ்யாவில் நடந்த உலக கோப்பையில் வழங்கப்பட்டதை விட ரூ.328 கோடி அதிகமாகும். சாம்பியன் பட்டம் வென்று கோப்பையை முத்தமிடும் அணிக்கு முதல் பரிசாக ரூ.342 கோடி வழங்கப்படும். பைனலில் தோற்று 2வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.244 கோடி கிடைக்கும். 3வது மற்றும் 4வது இடம் பிடித்த அணிகளுக்கு முறையே ரூ.219 கோடி, ரூ.203 கோடி வழங்கப்பட்ட நிலையில், காலிறுதியில் தோற்று வெளியேறிய 4 அணிகளுக்கு தலா ரூ.138 கோடி, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வெளியேறிய 8 அணிகளுக்கு தலா ரூ.105 கோடி மற்றும் லீக் சுற்றுடன் மூட்டை கட்டிய 16 அணிகளுக்கு தலா ரூ.73 கோடி வழங்கப்பட்டது.* நேருக்கு நேர்…சர்வதேச ஆட்டங்களில் இந்த 2 அணிகளும் இதுவரை 12 முறை மோதியுள்ளதில் அர்ஜென்டினா 6 – 3 என முன்னிலை வகிக்கிறது. 3 ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன. உலக கோப்பை போட்டிகளில் 3 முறை மோதியுள்ளன. அதிலும் அர்ஜென்டினா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.* முன்னேறிய விதம்…அர்ஜென்டினாமுதல் லீக் ஆட்டத்தில் சவுதி அரேபியாவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்த அர்ஜென்டினா, அதன் பிறகு தொடர்ச்சியாக 5 வெற்றிகளைக் குவித்து பைனலுக்கு முன்னேறி உள்ளது. * லீக் ஆட்டங்களில் மெக்ஸிகோ, போலந்து அணிகளை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய அர்ஜென்டினா, ரவுண்ட் ஆப் 16ல் ஆஸ்திரேலியாவை 2-1 என தோற்கடித்தது.* காலிறுதியில் நெதர்லாந்தையும் (2-2 டிரா, பெனால்டி ஷூட் அவுட்டில் 4-3), அரையிறுதியில் குரோஷியாவையும் (3-0) வீழ்த்தியது.பிரான்ஸ்      லீக் சுற்றில் ஆஸ்திரேலியா (4-1), டென்மார்க் (2-1) அணிகளை வீழ்த்திய நடப்பு சாம்பியன், கடைசி லீக் ஆட்டத்தில் துனிசியாவிடம்( 1-0) அதிர்ச்சி தோல்வி கண்டது.*  ரவுண்ட் ஆப் 16ல் போலந்து (3-1), காலிறுதியில் இங்கிலாந்து (2-1) அணிகளை வீழ்த்திய பிரான்ஸ், அரையிறுதியில் மொராக்கோவின் சவாலை (2-0) முறியடித்து பைனலுக்குள் நுழைந்தது.தொடர்ந்து சாம்பியன்* தொடர்ந்து 2 உலக கோப்பைகளை வென்ற அணிகளின் பட்டியலில் இத்தாலி (1934, 1938), பிரேசில் (1958, 1962) என 2 நாடுகள் மட்டுமே உள்ளன.  பிரான்ஸ் இன்று வென்றால், கோப்பையை தக்கவைத்த 3வது நாடாக சாதனை படைக்கும்.* உலக கோப்பையை  பிரேசில் 5முறையும், ஜெர்மனி, இத்தாலி தலா 4 முறையும் வென்றுள்ளன. இவற்றுக்கு  அடுத்து 3வது இடத்தில் உள்ள அர்ஜென்டினா, பிரான்ஸ், உருகுவே நாடுகள் தலா 2 முறை கோப்பையை கைப்பற்றி உள்ளன. எஞ்சிய 2 கோப்பைகளை இங்கிலாந்து, ஸ்பெயின் தலா ஒருமுறை சுவைத்துள்ளன. சாதனை சரித்திரம்…* தொடர்ந்து 5 உலக கோப்பைகளில் கோல அடித்த வீரர் என்ற சாதனையை போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ளார். * போர்ச்சுகலுக்காக உலக கோப்பையில் கோலடித்த வயதான வீரர் என்ற சாதனையும் ரொனால்டோவுக்கு (37ஆண்டு, 292நாட்கள்) சொந்தம்.* ரொனால்டாவை போல் 5 உலக கோப்பைகளில் விளையாடியவர் என்ற பெருமை மெஸ்ஸியுடன் லோதர் மாத்யூஸ் (ஜெர்மனி), ஆன்டோனியோ கர்பஜல் (மெக்சிகோ), ரபேல் மார்கியூஸ் (மெக்சிகோ) ஆகியோருக்கும் சொந்தம்.* அர்ஜென்டினாவுக்காக உலக கோப்பைகளில் 10 கோல் அடித்த பாடிஸ்டுடா சாதனையை இந்த உலக கோப்பையில் மெஸ்ஸி முறியடித்துள்ளார்.* அதிக உலக கோப்பை போட்டிகளில் 25 ஆட்டங்களில் விளையாடியவர் என்ற சாதனையை ஜெர்மனி வீரர் லோதர் மாத்யூசுடன் பகிர்ந்துக் கொண்டுள்ளார். பைனலில் இன்று விளையாடியதும் லோதர் சாதனையை முறியடித்து முதலிடத்துக்கு முன்னேறுவார்.* ஸ்பெயின் வீரர் கெவி தனது முதல் கோலை கோஸ்டரிகாவுக்கு எதிராக அடித்தபோது 2004ம் ஆண்டில் பிறந்த வீரரின் முதல் கோலாக சிறப்பிடம் பெற்றது.* பிரான்ஸ் அணிக்காக அதிக கோல்கள் அடித்தவர் என்ற தியர்ரி ஹென்றி (51கோல்கள்) சாதனையை ஆலிவர் ஜிரவுட் (53) இந்த உலக கோப்பையில் முறியடித்துள்ளார். இந்தப் பட்டியலில் உள்ள கிரீஸ்மேன் (42), எம்பாப்பே (33) ஆகியோர் இன்றும் களம் காண உள்ளனர். இப்போது 37 கோல்களுடன் 5வது இடத்தில் உள்ள கரீம் பென்சிமா காயம் காரணமாக விலகினார். அவருக்கு பதில்தான் ஆலிவர் ஜிரவுட் களமிறக்கப்பட்டார்.* பிரான்ஸ் கேப்டனும் கோல் கீப்பருமான ஹியூகோ லோரிஸ் இதுவரை தனது நாட்டுக்காக 144 ஆட்டங்களில் விளையாடி உள்ளார். இன்று 145வது ஆட்டத்தில் களம் காண போகும் பிரான்ஸ் வீரர் என்ற புதிய சாதனையை படைக்க உள்ளார்….

The post கத்தார் உலக கோப்பை கால்பந்து 2022: 3வது முறையாக கோப்பையை வென்று சாதிக்க போவது யார்? சாம்பியன்கள் பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Tags : Qatar World Cup Football 2022 ,Doha ,Argentina ,France ,FIFA World Cup football ,Dinakaran ,
× RELATED அர்ஜெண்டினாவில்...