×

சபரிமலை தரிசனத்தில் ஐகோர்ட் உத்தரவிட்டும் தனி வரிசை ஏற்படுத்தாததால் பெண்கள், குழந்தைகள் அவதி

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த சில வாரங்களாக பக்தர்கள் கட்டுக்கடங்காமல் குவிந்து வருகின்றனர். இதனால் பக்தர்கள் 10 முதல் 12 மணி நேரம் வரை வரிசையில்  காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். பல மணி நேரம் வரிசையில் காத்திருப்பதால் குழந்தைகள், வயதானவர்கள் உள்பட அனைவருக்கும் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதனால் பலமுறை ஏராளமானோர் மயக்கமும் காயமும் அடைந்தனர். இந்த விவரம் கேரள உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு சென்றது. இதைத் தொடர்ந்து வயதானவர்கள், பெண்கள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் உடல்நலம் குன்றியவர்களுக்கு தரிசனத்திற்கு தனி வரிசை ஏற்படுத்த வேண்டும் என்று தேவசம்போர்டுக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன் 3 கேரள அமைச்சர்கள் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்திலும் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தனி வரிசை ஏற்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த இரு தினங்களுக்கு முன் சபரிமலை வந்த கேரள டிஜிபி அனில் காந்தும் உறுதியளித்தார். ஆனால் இதுவரை பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தப்படவில்லை. இதனால் நேற்றும் பெண்கள், குழந்தைகள் உள்பட அனைவரும் பல மணி நேரம் வரிசையில் நின்று சிரமப்பட்டனர். நேற்று தரிசனத்திற்கு முன்பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்தது. இதில் 85 ஆயிரத்திற்கு அதிகமானோர் தரிசனம் செய்தனர்.* நிலக்கல்லில் வசதி இல்லை நிலக்கல்லில் வாகனம் நிறுத்தும் இடத்தில் போதிய வசதிகள் இல்லாததால் பக்தர்கள் கடும் அவதியடைகின்றனர். எனவே இது தொடர்பாக ஆய்வு நடத்தி உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய சபரிமலை சிறப்பு ஆணையருக்கு கேரள  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நிலக்கல்-பம்பை இடையே கேரள அரசு பஸ்களில் அதிக அளவில் பக்தர்களை கொண்டு செல்லக்கூடாது என்றும்  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது….

The post சபரிமலை தரிசனத்தில் ஐகோர்ட் உத்தரவிட்டும் தனி வரிசை ஏற்படுத்தாததால் பெண்கள், குழந்தைகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Igord ,Sabarimalai ,Thiruvananthapuram ,Sabarimalai Iyappan Temple ,Sabarimalai VISION ,Children ,Awadi ,
× RELATED சபரிமலை கோயில் நடை 14ம் தேதி திறப்பு