×

டெல்லி எய்ம்ஸ் மீது சைபர் தாக்குதல்: சிபிஐ மூலம் இன்டர்போலுக்கு கடிதம்

புதுடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மீது நடந்த சைபர் தாக்குதல் விவகாரத்தில் இன்டர்போலிடம் சில தகவல்களை டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் கோரியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லி எய்ம்ஸ் மீது சைபர் தாக்குதல் நடந்தது. டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு ேபாலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லி எய்ம்ஸ் மீது சைபர் தாக்குதல் நடத்தியது சீன ஹேக்கர்கள் என்பதால், அவர்கள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து டெல்லி காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு சிபிஐ மூலமாக  இன்டர்போலுக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த கடிதத்தில், சீன இணைய  வழங்குநரிடமிருந்து சில தரவுகள் கோரப்பட்டுள்ளன. ஹேக்கர்களிடம் இருந்து இரண்டு மின்னஞ்சல்கள் எய்ம்ஸ்-க்கு வந்ததால், அவர்களின் ஐபி முகவரிகள் கோரப்பட்டுள்ளன. மேலும் அதுகுறித்த விபரங்களும் கோரப்பட்டுள்ளது. எய்ம்ஸ் சைபர் தாக்குதல் காரணமாக, அதன் சில தரவுகள் முடங்கிவிட்டது. அந்த தரவுகளை மீட்டு எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்று தெரிவித்தனர். …

The post டெல்லி எய்ம்ஸ் மீது சைபர் தாக்குதல்: சிபிஐ மூலம் இன்டர்போலுக்கு கடிதம் appeared first on Dinakaran.

Tags : Delhi ,CBI ,Interpol ,New Delhi ,Delhi Special Branch Police ,AIIMS ,Dinakaran ,
× RELATED கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு குறித்து...