×

பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் நூற்றாண்டு நிறைவு விழா; சென்னை பெரியார் திடலில் இன்று மாலை மாபெரும் பொதுக்கூட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்

சென்னை: பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சென்னை பெரியார் திடலில் இன்று மாலை மாபெரும் பொதுக்கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். “முதலில் நான் மனிதன், இரண்டாவது நான் அன்பழகன், மூன்­றாவது நான் சுயமரியாதைக்காரன், நான்காவது நான் பேரறிஞர் அண்­ணாவின் தம்பி, ஐந்தாவது கலைஞரின் தோழன். இந்த உணர்வுகள், என் உயிர் உள்­ளவரை என்னோடு இருக்கும்” என்று தன்னை முன்மொழிந்து கொண்டு, அதன்படியே வாழ்ந்து, கொள்கையுணர்வு மறையாமல் நம் நெஞ்சில் நிலைத்து, நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர், பேராசிரியர் அன்பழகன். பேராசிரியரின் நூற்­றாண்டு நிறைவு விழாவினையொட்டி திமுக தலைமைக் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 100 பொதுக்கூட்­டங்கள் நடத்துவது என முடிவெடுத்து அறிவிக்கப்பட்­டது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் கடந்த 16ம் தேதி(வெள்ளிக்கிழமை) பேராசிரியரின் நூற்­றாண்டு நிறைவுப் பொதுக்கூட்­டங்கள்” நடைபெற்றது. இந்த நிலையில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்­டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்­டம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணியளவில் சென்னை வேப்பேரி  பெரியார் திடலில் நடக்கிறது. பொதுக்கூட்டத்திற்கு திமுக பொது செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமை வகிக்கிறார். சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு வரவேற்றுப் பேசுகிறார். பொருளாளரும், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, துணைப் பொது செயலாளர்கள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா எம்.பி, அந்தியூர் ப.செல்வராஜ் எம்.பி., கனிமொழி கருணாநிதி எம்.பி. ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.இக்கூட்­டத்தில் திமுக தலைவரும்,  முதல்வருமான மு.க.ஸ்டாலின், பேராசிரியர் நூற்­றாண்டு விழாப் பேருரையாற்றுகிறார். மேலும், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொது செயலாளர் வைகோ எம்.பி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொது செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் உரையாற்றுகின்றனர். எழும்பூர் தெற்குப் பகுதி செயலாளர் எழும்பூர் வி.சுதாகர் நன்றி கூறுகிறார். முன்னதாக மாலை 5.30 மணி அளவில் புகைப்படக்கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்….

The post பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் நூற்றாண்டு நிறைவு விழா; சென்னை பெரியார் திடலில் இன்று மாலை மாபெரும் பொதுக்கூட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார் appeared first on Dinakaran.

Tags : Anbazagan ,Chennai Periyar Thidal ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Prof. ,Anbazhagan ,Periyar Thidal ,Anbzhagan ,Periyar Thital, Chennai ,
× RELATED பாபநாசம் அருகே பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் கைது