×

கடல் நீரோட்டத்தில் மாற்றம்; புஷ்பவனம் கடற்கரையில் 1 கி.மீ., தூரம் சேறு: மீனவர்கள் அவதி

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் கோடியக்கரை, மணியன்தீவு, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வாணவன்மகாதேவி உள்ளிட்ட 20 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த மீனவ கிராமங்களில் 65 விசைப்படகுகள், 1,400 பைபர் படகுகள் உள்ளன. கோடியக்கரையில் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை மீன்பிடி சீசன் காலமாகும். இந்த சீசன் காலத்தில் நாகை, மாயிலாடுதுறையை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் பைபர் படகுகளுடன் கோடியக்கரையில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த சீசன் காலத்தில் நாள்ேதாறும் உள்ளூர், வெளியூர் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகளில் கடலில் மீன் பிடிக்க மீனவர்கள் செல்கின்றனர்.இந்நிலையில் கடல் நீரோட்டத்தின் மாற்றம் காரணமாக புஷ்பவனம் கடற்கரை பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு சேறு ஒதுங்கி உள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பெரும் சிரமத்துக்கு பிறகே கடலுக்கு மீனவர்கள் செல்லும் நிலை உள்ளது. எனவே புஷ்பவனம் கடற்கரையில் சேறு ஒதுங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஒன்றிய, மாநில அரசுக்கு வேதாரண்யம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post கடல் நீரோட்டத்தில் மாற்றம்; புஷ்பவனம் கடற்கரையில் 1 கி.மீ., தூரம் சேறு: மீனவர்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Pushpavanam Fishermen ,Fishermen Awadi ,Vedaranayam ,Kodiyakarai ,Manyandivu ,Arukatwara ,Pushpavanam ,Fallapallam ,Vanavanmahadevi ,Nagai District ,Vedaranya Thaluga ,Dinakaran ,
× RELATED வேதாரண்யத்தில் தேசிய வாழைப்பழம் தினம் கொண்டாட்டம்