×

பெருகி வரும் மக்கள்தொகையை சமாளிக்க சென்னைக்கு கூடுதலாக 3 பஸ் நிலையங்கள் தேவை: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

சென்னை: சென்னை கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை நேற்று காலை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன்,  பி.கே.சேகர்பாபு ஆகியோர் அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தனர். பின்னர், அறநிலையம் மற்றும் சிஎம்டிஏ அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணிகளை விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை செய்து வருகிறோம். பொங்கலுக்கு முன்பு பேருந்து நிலையத்தை திறப்பதற்கு முயற்சி செய்கிறோம். ஆனால், ஆய்வின்போது துறையின் செயலாளரும், மாவட்ட அமைச்சரும் பல்வேறு புதிய திட்டங்களை பேருந்து நிலையத்தில் ஏற்படுத்த வலியுறுத்தி இருக்கிறார்கள். அவைகளையும் இணைத்து மேற்கொள்ள வேண்டி இருப்பதால் எவ்வளவு விரைவாக இந்த பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்காக அளிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்வோம்.கோயம்பேடு பேருந்து நிலையம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் போன்று இன்னும் இரண்டு, மூன்று பேருந்து நிலையங்கள் ஏற்பட்டால்தான் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப சென்னை மக்களுடைய பயன்பாட்டிற்கு உதவியாக இருக்கும் என்பதால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. இப்பகுதியில் மெட்ரோ ரயில் திட்டம் வருவதற்கு மாவட்ட அமைச்சர் தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வருகிறார். மெட்ரோ ரயில் விரிவுபடுத்துவதற்கு உண்டான கடிதத்தை துறையின் செயலாளர், மெட்ரோவுக்கு அளித்துள்ளார். அமைச்சர்கள் சொல்கின்ற கருத்துகள் எதுவாக இருந்தாலும் அவைகளை நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்  உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில், நிச்சயம் கிளாம்பாக்கம் பகுதியில் புதிய ரயில் நிலையம் அமைப்பதற்கு உண்டான முயற்சி, தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை செயலர் அபூர்வா, சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் அதுல்ய மிஸ்ரா, சென்னை பெருநகர வளர்ச்சி குழும முதன்மை நிர்வாக அலுவலர் லட்சுமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்….

The post பெருகி வரும் மக்கள்தொகையை சமாளிக்க சென்னைக்கு கூடுதலாக 3 பஸ் நிலையங்கள் தேவை: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister ,P. K. ,Sekarbabu ,Clambakkam ,Mo. Anparasan ,P. K. Sekarbabu ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...