×

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் கூடுதலாக 11 புதிய மின் பகிர்மான கோட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், எரிசக்தித் துறை சார்பில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் கூடுதலாக 11 புதிய மின் பகிர்மான கோட்டங்களை தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் ஏற்கனவே 176 கோட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுள் கோட்டங்களுக்கு இடையேயான மின் இணைப்புகள் மற்றும் பணிகளில் சமநிலை இல்லை. உதாரணமாக, தாம்பரம் கோட்டத்தில் 6,79,239 மின் இணைப்புகளும், கூடலூர் கோட்டத்தில் குறைந்தபட்சமாக 68,022 மின் இணைப்புகளும் உள்ளன. பணிகளை சமநிலைப்படுத்தும் நோக்கத்தில், நிர்வாக அமைப்பு மறுசீரமைப்பு செய்யப்படும் என 2021-22ம் ஆண்டிற்கான எரிசக்தித் துறையின் மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.அதன்படி,  ஏற்கனவே உள்ள 176 மின் பகிர்மான கோட்டங்களுடன், கூடுதலாக சென்னை மாவட்டம் – சேப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம் – சோழிங்கநல்லூர் மற்றும் பல்லாவரம், கிருஷ்ணகிரி மாவட்டம் – தேன்கனிக்கோட்டை, தருமபுரி மாவட்டம் – பென்னாகரம், விழுப்புரம் மாவட்டம் – திருவெண்ணைநல்லூர், திருப்பூர் மாவட்டம் – ஊத்துக்குளி, திண்டுக்கல் மாவட்டம் – வேடசந்தூர், பெரம்பலூர் மாவட்டம் – ஜெயங்கொண்டம், விருதுநகர் மாவட்டம் – சாத்தூர், சேலம் மாவட்டம் – கெங்கவள்ளி ஆகிய இடங்களில் புதிதாக 11 மின் பகிர்மான கோட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் பொன்முடி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் செந்தில்பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்….

The post தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் கூடுதலாக 11 புதிய மின் பகிர்மான கோட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Power Generation and Sharing Corporation ,CM G.K. Stalin ,Chennai ,Chief Minister ,G.K. Stalin ,Chief Secretariat ,Tamil Nadu Electricity and Sharing Corporation ,Department of Energy ,Dinakaran ,
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...