×

திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை மீது காட்சி அளித்த மகாதீபம் இன்றுடன் நிறைவு பெறுகிறது

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 2668 அடி உயர மலை உச்சி மீது காட்சி அளித்த மகா தீபம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவின் நிறைவாக கடந்த 6-ந்தேதி கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த மகா தீபம் மலை உச்சியில் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும். அதன்படி, தினமும் மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டு வருகின்றது. மகா தீப காட்சியை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், 2,668 அடி உயர மலை மலை மீது காட்சி தரும் மகாதீபம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. அதைத்தொடர்ந்து நாளை காலை மகாதீபம் ஏற்றப்பட்ட தீப கொப்பரை மலை உச்சியில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர், தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் முடிந்ததும், கோயில் 5ம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்படுகிறது….

The post திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை மீது காட்சி அளித்த மகாதீபம் இன்றுடன் நிறைவு பெறுகிறது appeared first on Dinakaran.

Tags : Mahathipam ,Thiruvandamalai ,Tiruvanna ,Maha ,Thiruvanamalai ,
× RELATED தி.மலை பௌர்ணமி கிரிவலத்தையொட்டி இன்று...