×

மலேசியாவில் நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழப்பு: நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்..!

கோலாலம்பூர்: மலேசியாவில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16-ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் கோலாலம்பூர் ஊரை அடுத்துள்ள மலை பகுதி இங்குள்ள பதங்கலி என்ற நகரம் மலையேற்றத்திற்கு புகழ் பெற்ற இடமாகும். மலை பாதைகள் நிறைந்த இந்த பகுதியில் இன்று அதிகாலை 3 மணிக்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. மலையின் ஒருபகுதி சரித்து பள்ளத்தாக்கிற்குள் விழுந்தது. இதனால், சுமார் 100 அடிக்கும் கீழே அமைந்துள்ள மலையேற்ற வீரர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த முகாமினை டன் கணக்கில் மணலும், பாறைகளும் விழுந்து மூடிவிட்டன. தகவலறிந்து விரைந்து சென்ற மலேசிய பேரிடர் மேலாண்மை படையினர் இடிபாடுகளிலிருந்து படுகாயங்களுடன் 5 பேரை மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களின் 2 பேர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விபத்தின் போது முகாமில் 79 பேர் இருந்துள்ள நிலையில் 23 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ளவர்களை தேடும் பணியில் பேரிடர் மேலாண்மை படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இடிபாடுகளில் இருந்து 14 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16-ஆக உயர்ந்துள்ளது.     …

The post மலேசியாவில் நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழப்பு: நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்..! appeared first on Dinakaran.

Tags : Kuala Lumpur ,Malaysia ,Koala Lumpur ,Dinakaran ,
× RELATED மலேசியாவில் கடற்படை ஒத்திகையின்போது 2...