×

குண்டர் சட்டத்தில் 2 ரவுடிகள் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (24). இவர் மீது காஞ்சிபுரம் தாலுகா, ஸ்ரீபெரும்புதூர், சிவகாஞ்சி, விஷ்ணுகாஞ்சி, சுங்குவார்சத்திரம், மாகறல், பாலுச்செட்டிசத்திரம் உள்ளிட்ட காவல்நிலையங்களில் கொலை முயற்சி, திருட்டு மற்றும் அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுபோல் மொளச்சூர் பகுதியை சேர்ந்த நாகராஜ் (32) என்பவர் மீதும் காவல்நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி சுதாகர், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தியிடம் பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் சந்தோஷ், நாகராஜ் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் சிறையில் அடைக்கப்பட்டனர்….

The post குண்டர் சட்டத்தில் 2 ரவுடிகள் கைது appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Santosh ,Vaiyavur ,Kanchipuram taluka ,Sriperumbudur ,Sivakanchi ,Vishnukanchi ,Dinakaran ,
× RELATED பொது தேர்வுகளில் நல்ல தேர்ச்சி...