×

தாறுமாறாக ஓட்டியதால் போதை அரசு பஸ் டிரைவர் போலீசில் ஒப்படைப்பு

திருப்புத்தூர்:  திருப்புத்தூர் அருகே வேலங்குடி கோயில் திருவிழாவிற்கு சென்ற அரசு பஸ் டிரைவர் போதையில் இருந்ததால் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். திருப்புத்தூர் அருகே வேலங்குடியில் பிரசித்திப்பெற்ற சாம்பிராணி வாசகர் கருப்பர் கோயில் உள்ளது. இக்கோயிலில் விழாவில் நேற்று பக்தர்களின் வருகை அதிகமாக இருந்தது. பக்தர்களின் வசதிக்காக திருப்புத்தூர் போக்குவரத்து டெப்போவில் இருந்து சிறப்பு பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன. நேற்று பகலில் திருப்புத்தூரில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி கொண்டு அரசு பஸ் வந்தது. பஸ்சை திருப்புத்தூர் கான்பா நகரைச்சேர்ந்த முருகேசன்(45) ஓட்டிவந்துள்ளார். வரும் வழியில் பஸ் பல இடங்களில் நிலைதடுமாறி வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ந்துபோன பயணிகள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வேலங்குடி வந்துள்ளனர். அப்போது டிரைவர் முருகேசன் பஸ்சை நிறுத்தும்போது தடுமாறியுள்ளார். இதனையடுத்து பயணிகள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு  அவசர அவசரமாக இறங்கியுள்ளனர். பின்னர் பஸ் டிரைவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அவரை விசாரித்ததில், அவர் முழுபோதையில் இருந்தது தெரியவந்தது. மேலும் அவருடைய ஓட்டுநர் உரிமத்தை பரிசோதனை செய்த போது, அவர் கையில் வைத்திருந்த அட்டையில் 2012ம் ஆண்டே உரிமம் முடிந்துவிட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் அவரிடம் கேட்டதற்கு, தற்போது உள்ள ஓட்டுநர் உரிமத்தை டெப்போவில் வாங்கி வைத்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். பின்னர் டிரைவர் முருகேசனை சிங்கம்புணரி போக்குவரத்து போலீசார் மனோகரன் அழைத்துச் சென்றார். டிரைவர் முருகேசன் மீது மதுபோதையில், பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் பஸ்சை ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் டெப்போவில் இருந்து பஸ்சை எடுக்கும் முன் டிவைரின் நிலைமை குறித்து அதிகாரிகள் பரிசோதனை செய்யவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்….

The post தாறுமாறாக ஓட்டியதால் போதை அரசு பஸ் டிரைவர் போலீசில் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Drunk government ,Tiruputhur ,Velangudi temple festival ,Tiruputur ,
× RELATED கஞ்சா கடத்திய வாலிபர் கைது