×

இன்று முதல் டி.டி.வி.தினகரன் தேர்தல் பிரசாரம்

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வேட்பாளர்களை ஆதரித்து இன்று முதல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். சட்டமன்ற தேர்தலில் அமமுக 160க்கும் மேற்பட்ட தொகுதிகளில் களம் காண்கிறது. கோவில்பட்டி தொகுதியில்  போட்டியிட உள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில், இன்று முதல் வரும் 30ம் தேதி வரையில் தொகுதிகள் தோறும் டிடிவி.தினகரன் பிரசாரம் மேற்கொள்கிறார். திருவொற்றியூர், பொன்னேரி, மாதவரம், அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி, மதுரவாயல் ஆகிய பகுதிகளில் இன்று பிரசாரம் செய்கிறார்.  இதை தொடர்ந்து, நாளை மயிலாப்பூர் மாங்கொல்லை, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, சிந்தாதிரிப்பேட்டை,  துறைமுகம், ராயபுரம், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்கிறார். மாலை 4 மணிக்கு தொடங்கும் பிரசாரம் இரவு 9 மணி வரை நடைபெறும். கடைசி நாளான 30ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மதுரை கிழக்கு, மேலூர், சிவகங்கை,  காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்கிறார். பின்னர், அன்றைய தினம் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்….

The post இன்று முதல் டி.டி.வி.தினகரன் தேர்தல் பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : T. ,TD CV ,dinakaran ,Chennai ,Amadam ,Secretary General ,DTV Dinakaran ,TD CV Dinakaran ,
× RELATED 53-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்:...