×

பணி நிரந்தரம் செய்ய கோரி கடல் வழியாக படகுகளில் சென்று அதானி துறைமுகத்தை ஒப்பந்த ஊழியர்கள் முற்றுகை

பொன்னேரி: பணி நிரந்தரம் செய்ய கோரி காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுக நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் அதானி நிறுவன துறைமுகம் இயங்கி வருகிறது. கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் இங்கு வசித்த மீனவ கிராம மக்களை அப்புறப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு மாற்று இடம் வழங்கி, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அளிப்பதாக அந்நிறுவனம் வாக்குறுதி அளித்தது. இதன்படி கிராமத்தை சேர்ந்த 140 பேர் தற்போது வரை குறைந்த சம்பளத்தில் ஒப்பந்த ஊழியர்களாக வேலை செய்து வருகின்றனர். இவர்களை இதுவரை கம்பெனி நிர்வாகம் பணி நிரந்தரம் செய்யவில்லை.இதற்கிடையே, இதனை கண்டித்து கடந்த மாதம் 11ம் தேதி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த பொன்னேரி தாசில்தார், கிராம மக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். எனினும், பணி நிரந்தரத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், அதானி துறைமுக நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியர்களாக இருக்கும் 140 பேரை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, நேற்று காலை 6 மணியளவில் அதானி  துறைமுக நிறுவன நுழைவாயிலில் காட்டுப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சேதுராமன், ஒன்றிய கவுன்சிலர் தனலட்சுமி தலைமையில் கிராம நிர்வாகிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட மக்கள் குடும்பத்துடன் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, அதானி நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஒருவாரத்தில் தீர்வு காணப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டம் சுமார் 6 மணி நேரம் நடந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் இங்கு வசித்த மீனவ கிராம மக்களை அப்புறப்படுத்தி அவர்களுக்கு மாற்று இடம் வழங்கி, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அளிப்பதாக அந்நிறுவனம் வாக்குறுதி அளித்தது.* தேர்தலை புறக்கணிக்க பொதுமக்கள் முடிவுகிராம மக்கள் கூறுகையில்,  “13 ஆண்டுகளாக பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் 140 பேரை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இல்லையேல், வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணித்து தமிழக அரசுக்கு பாடம் புகட்டுவோம்” என்றனர்….

The post பணி நிரந்தரம் செய்ய கோரி கடல் வழியாக படகுகளில் சென்று அதானி துறைமுகத்தை ஒப்பந்த ஊழியர்கள் முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Adani ,Bonneri ,Wild School ,Kori ,Adani port ,Dinakaran ,
× RELATED பங்குச்சந்தை முறைகேடு: அதானி குழுமத்துக்கு செபி நோட்டீஸ்