×

தமிழகத்தில் தனியார் ஆய்வகங்களில் ஆர்டிபிசிஆர் சோதனை கட்டணம் 1200 ஆக குறைப்பு: முதல்வர் காப்பீடு திட்டத்தில் 800 மட்டுமே நிர்ணயம்

சென்னை: தமிழகத்தில் உள்ள தனியார் ஆய்வகங்களில் ஆர்டிபிசிஆர் சோதனை கட்டணம் ரூ.1200 ஆக குறைக்கப்பட்டுள்ளது. முதல்வர் காப்பீடு திட்டத்தில் ரூ.800 மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துகொண்டே வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய சுகதாரத்துறை மற்றும் உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து கூறி வருகிறது. இதன்படி தமிழகத்தில் அதிக அளவு கொரோனா சோதனை செய்யப்படுகிறது. தற்போது தினசரி 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் கொரோனா சோதனைகள் செய்யப்படுகிறது. இதுவரை செய்யப்பட்ட சோதனையில் மொத்தம் 76 சதவீத சோதனைகள் அரசு கொரோனா சோதனை மையங்களில் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 24 சதவீத சோதனைகள் தனியார் மையங்களில் செய்யப்பட்டது.இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் ஆர்டிபிஆர் சோதனை கட்டணம் அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இதுகுறித்து, தினகரன் நாளிதழ் சார்பில் சிறப்பு கட்டுரைகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் தனியார் சோதனை மையங்களில் ஆர்டிபிசிஆர் சோதனை கட்டணங்களை குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி பொதுமக்களுக்கு ஆர்டிபிசிஆர் சோதனை கட்டணமாக ரூ.1200 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விடுதிகளுக்கு சென்று மாதிரிகளை சேகரித்தால் ரூ.300 கூடுதலாக வசூலித்து கொள்ளலாம். முதல்வரின் மருத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் சோதனை செய்பவர்களுக்கு ரூ.800 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக பொதுமக்களுக்கு ரூ.3 ஆயிரமும், காப்பீடு திட்டத்தில் ரூ.2500ம் வசூலிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. …

The post தமிழகத்தில் தனியார் ஆய்வகங்களில் ஆர்டிபிசிஆர் சோதனை கட்டணம் 1200 ஆக குறைப்பு: முதல்வர் காப்பீடு திட்டத்தில் 800 மட்டுமே நிர்ணயம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Dinakaran ,
× RELATED வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும...