×

பொதுசின்னம் வழங்க உத்தரவிடக் கோரி வழக்கு; சமக, ஐஜேகே மனுக்களை நாளைக்குள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளுக்கும் பொதுவான சின்னம் ஒதுக்க கோரிய வழக்குகளில் தேர்தல் ஆணையத்துக்கு இன்றே விண்ணப்பிக்க இந்திய ஜனநாயக கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, உள்ளிட்ட கட்சிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் தங்கள் கட்சியின் சார்பில் போட்டியிடக்கூடிய அனைத்து வேட்பாளர்களுக்கும் பொதுவான சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்திய ஜனநாயக கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி ஆகிய கட்சிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வேட்பு மனு தாக்கல் தொடங்குவதற்கு 5 நாட்களுக்கு முன்பாகவே இந்த கட்சிகள் பொதுவான சின்னம் வழங்க வேண்டும் என்று கேட்டு விண்ணப்பம் அளித்திருக்க வேண்டும். ஆனால் இருந்த போதும் மார்ச் 1-ம் தேதியே விண்ணப்பித்த போதும் விண்ணப்பத்தில் நிர்வாகளுடைய கையெழுத்து இல்லாததால் அவை நிராகரிக்கப்பட்டதாகவும், அந்த குறைபாடு களையப்பட்டு மறுபடியும் விண்ணப்பிக்கும் போது அவர்கள் 7-ம் தேதிக்கு பிறகு தான் பிண்ணப்பித்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில் இவர்களுடைய கோரிக்கை பரிசீலிக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருந்த போதிலும் நீதிபதிகள் குறுக்கிட்டு வாக்குரிமை போல் தேர்தலில் போட்டியிடும் உரிமையும் முக்கியம் என்று தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இந்த விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்வதற்கு தயாராக இருப்பதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு இந்த 3 கட்சிகளும் உடனடியாக அதாவது இன்றே அந்த விண்ணப்பத்தை தேர்தல் ஆணையத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அந்த விண்ணப்பங்களை பரிசீலித்து நாளைக்குள் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு இந்த வழக்குகளை முடித்து வைத்துள்ளனர். …

The post பொதுசின்னம் வழங்க உத்தரவிடக் கோரி வழக்கு; சமக, ஐஜேகே மனுக்களை நாளைக்குள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Samaga ,IJK ,ECtHR ,Chennai ,Election Commission of India ,Samaka ,Dinakaran ,
× RELATED பாலியல் புகார் வழக்கில் குண்டர் சட்ட...