×

வங்கிகள் வேலை நிறுத்தம் எதிரொலி மாவட்டத்தில் ரூ.1000 கோடி பரிவர்த்தனை பாதிப்பு

திருப்பூர் : பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்து, அனைத்து வங்கி ஊழியர்கள் கூட்டுக்குழு சார்பாக நேற்று நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் 4000 வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதனால் மாவட்டத்தில் ரூ.100 கோடி அளவில் பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. பொதுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் வங்கிகளை தனியார்ம யமாக்க மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை கண்டித்து, அனைத்து வங்கி ஊழியர்கள் கூட்டுக்குழு சார்பில் நேற்று, இன்று (15,16 ) என இரண்டு நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். அதன் படி முதல் நாள் வேலை நிறுத்த ேபாராட்டம் நேற்று நடைபெற்றது. இந்த போராட்டத்தில் திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட 350 வங்கி கிளைகளில் பணியாற்றும் 4000 க்கும் மேற்பட்ட வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரு நாள் வங்கி வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக வங்கி பணம் மற்றும் காசோலை பரிவர்த்தனை, அந்நிய செலாவணி பரிவர்த்தனை என ரூ. 1000 கோடி அளவில் பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.திருப்பூர்:  பொதுத்துறை வங்கிகளை தனியார்மயப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பினர் நேற்று திருப்பூர் ஊத்துக்குளி ரோடு பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வங்கி ஊழியர்கள் கூட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் மனோகரன் தலைமை வகித்தார். வங்கி அதிகாரிகள் சங்க நிர்வாகி விஜயானந்த், பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகி பெலிக்ஸ் பால்ராஜ், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க நிர்வாகி மகாதேவன், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகி ராதாகிருஷ்ணன், உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுத்துறை வங்கிகளை காக்க வேண்டும், பொதுத்துறை வங்கிகளை தனியார் மையமாக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 150க்கும் மேற்பட்ட வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்….

The post வங்கிகள் வேலை நிறுத்தம் எதிரொலி மாவட்டத்தில் ரூ.1000 கோடி பரிவர்த்தனை பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : echo ,Tirupur ,
× RELATED வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை!:...