×

அதிமுக எம்எல்ஏ இந்த பக்கமே வரவில்லை; உங்களுக்கு தான் எங்கள் ஓட்டு திமுக வெற்றி பெறுவது உறுதி: மயிலை.வேலுவிடம் பெண்கள் வாக்குறுதி

சென்னை: மயிலாப்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் மயிலை. வேலுவுக்கு, பொதுமக்கள் உங்களுக்குத்தான் எங்கள் ஓட்டு, வெற்றி பெறுவது உறுதி என வாக்குறுதி அளித்துள்ளனர். நடைபெற உள்ள சட்ட மன்ற தேர்தலில், சென்னை மயிலாப்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் மயிலை.வேலு பே௱ட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் நேற்று 124வது வட்டத்தில்   தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதனைத்தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று  காலை 7 மணிக்கு மீண்டும் பிரசாரத்தை தொடங்கிய அவர்  முதற்கட்டமாக 121வது வட்டத்தில் உள்ள ராமகிருஷ்ணபுரம் பகுதி மக்களிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும், முண்டக்கண்ணியம்மன் கோவில் தெரு, ரங்கநாதபுரம், நாயக்கர் தோட்டம், நாட்டு சுப்ராயன் தெரு, காந்தி நகர், சண்முகபுரம், வி.எஸ்.வி. கோயில் தெரு, நாட்டு வீராச்சி தெரு, கல்லுக்காரன் தெரு, மாதவ பெருமாள் கோவில் தெரு ஆகிய  பகுதிகளில் வீடு, வீடாகவும், டீக்கடை, மார்க்கெட் பகுதியில் கடை வைத்திருப்பவர்கள் மற்றும் பொதுமக்களிடம்  வாக்குசேகரித்தார்.  அப்போது பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர். அப்போது அப்பகுதி பெண்கள், கடந்த முறை வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏ தேர்தல் நேரத்தில் தான் இந்த பகுதிக்கு வந்தார். அப்போது பார்த்தது தான்; அதன்பிறகு  அவரை பார்த்ததே இல்லை. எனவே இந்த முறை கண்டிப்பாக இந்த தொகுதியில் நீங்கள் தான் வெற்றி பெற போகிறீர்கள். எங்களுடைய வாக்கு அனைத்தும் உங்களுக்கு தான் என்று வாக்குறுதி அளித்தனர். அப்போது அம்மக்களிடம்  திமுக வேட்பாளர் மயிலை த.வேலு, நீங்கள் என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைந்தவுடன் உங்கள் பகுதியில் உள்ள குறைகள் அனைத்தும்  உடனடியாக சரி செய்யப்படும். எனவே உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என உறுதியளித்து தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்….

The post அதிமுக எம்எல்ஏ இந்த பக்கமே வரவில்லை; உங்களுக்கு தான் எங்கள் ஓட்டு திமுக வெற்றி பெறுவது உறுதி: மயிலை.வேலுவிடம் பெண்கள் வாக்குறுதி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,MLA ,DMK ,Mailai.Velu ,Chennai ,Maylai ,Mylapore ,Velu ,Mailai Velu ,Dinakaran ,
× RELATED டிடிவி, ஓபிஎஸ் டெபாசிட் வாங்குவதே பெரிய விஷயம்: அதிமுக எம்எல்ஏ பளீர்