×

தொழில் முனைவோர்களுக்காக திமுக அரசு ரூ.536 கோடி மானியம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

சென்னை: குரோம்பேட்டையில் உள்ள சென்னை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில்,
தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பாக புத்தாக்க
கண்டுபிடிப்பு கண்காட்சி உள்ளிட்ட விழா நேற்று நடந்தது. குறு, சிறு மற்றும்
நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கண்காட்சியை
துவக்கி வைத்தார்.25 கண்டுபிடிப்பாளர்களுக்கு ரூ.34 லட்சமும், கல்லூரிகள்
அளவில் 25 கண்டுபிடிப்புகளுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம், ரூ.25 லட்சமும் 
வழங்கினார். இதுதவிர, புத்தாக்க தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின்
கீழ் மாணவர்கள் தொழில் உருவாக்கும் நோக்கத்துடன் 25 மையக் கல்லூரிகள்
செயல்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு மேலும் 5 புதிய மையக் கல்லூரிகளான
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை அறிவியல்
பல்கலைக்கழகம், மீன்வள பல்கலைக்கழகம், மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோஷியல் ஒர்க்
மற்றும் அரசு தொழில் பயிற்சி நிறுவனம் ஆகிய 5 புதிய மையக் கல்லூரிகளுக்கு
அமைச்சர் தா.மோ.அன்பரசன் பயிற்சி ஆணை வழங்கினார். 11000 மகளிர் சுய
உதவி குழு உறுப்பினர்களுக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சிகள்
வழங்க வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு
மற்றும் புத்தாக்க நிறுவனத்துக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
செய்யப்பட்டது. பின்னர், அமைச்சர் தா.மோ.அன்பரசன் நிருபர்களிடம்
கூறுகையில், ‘‘திமுக ஆட்சி அமைத்த 17 மாதங்களில் இதுவரை தொழில்
முனைவோர்களுக்காக ரூ.536 கோடி மானியம் வழங்கி உள்ளோம். ரூ.2,700 கோடிக்கு
மேல் கடன் உதவி வழங்கி, 17,000 தொழில் முனைவர்களை அரசு உருவாக்கி
இருக்கிறது’’ என்றார். நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா,
பல்லாவரம் இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி
கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ், செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத்
உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்….

The post தொழில் முனைவோர்களுக்காக திமுக அரசு ரூ.536 கோடி மானியம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,N. Moe Andarasan ,Chennai ,Entrepreneurial Development and Innovation Institute ,Chennai Technical College Campus ,Chrombett ,Thisagam Govt ,T. Moe Andarasan ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...