×

தேர்தல் விதிமீறல்: கோவில்பட்டியில் அதிமுக மற்றும் அமமுகவினர் 600 பேர் மீது வழக்கு பதிவு

கோவில்பட்டி: தேர்தல் விதிமுறைகளை மீறி கூட்டம் கூட்டியதாக அதிமுக மற்றும் அமமுகவினர் 600 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவில்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜு, அமமுக சார்பில் டிடிவி தினகரன் ஆகியோர் நேற்று வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். 2 பேரும் வேட்பு மனுத் தாக்கலின் போது அதிகளவில் கூட்டம் கூட்டியதாகவும், பட்டாசுகளை வெடித்ததாகவும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோய் பரவலை தடுக்க, மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ள விதிமுறைகள் அனைத்தும் பின்பற்ற வேண்டும் என, தேர்தல் ஆணையம் அறிவித்தது. பொதுக்கூட்டம் நடத்த, சமூக இடைவெளியை விட்டு, எவ்வளவு பேர் அமர அனுமதி அளிக்கலாம் என்பதை, மாவட்ட கலெக்டர்கள் முடிவு செய்து கொள்ள தேர்தல் ஆணையம் வலியுறுத்திருந்தது. வேட்ப்பு மனு தாக்கல் செய்யும் போது, வேட்பாளருடன் இருவர் மட்டும் அனுமதிக்கப்படுவர். தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தை சுற்றி, 100 மீட்டர் சுற்றளவுக்குள், இரண்டு வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும். வேட்பு மனு தாக்கல் செய்ய வருவோருக்கு, முன் கூட்டிேய, குறிப்பிட்ட நேரத்தை, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஒதுக்கலாம் என, தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும், முதல் முறையாக வேட்பு மனு தாக்கலுக்கான கட்டணத்தை, இணையதளம் வழியே செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டது. தேர்தல் பிரசாரத்திற்கு, ஐந்து பேர் மட்டும் செல்லலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. தேர்தல் பிரசார கூட்டங்களில், அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. ஆனால் அதிமுக மற்றும் அமமுகவினர் வேட்புமனு தாக்கல் செய்யும் போது விதிமுறைகளை மீறி கூட்டம் கூட்டியதால் 600 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

The post தேர்தல் விதிமீறல்: கோவில்பட்டியில் அதிமுக மற்றும் அமமுகவினர் 600 பேர் மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Tags : Govilbatti ,Kowilbatti ,
× RELATED சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு