×

வருமான வரித்துறை அதிகாரிகள் எனக்கூறி நகைக்கடை ஊழியர்களிடம் ரூ. 68 லட்சம் அபேஸ்

பெரம்பூர்: ஆந்திராவில் இருந்து சவுகார்பேட்டைக்கு நகை வாங்க வந்த ஊழியர்களிடம், வருமான வரித்துறை அதிகாரிகள் என்று கூறி ரூ. 68 லட்சம் பணத்தவர்ளை போலீசார் தீவிரமாக தேடுகின்றனர். ஆந்திரா குண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (42). இவர், குண்டூரில் சொந்தமாக நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர், தனது கடையில் பணிபுரியும் குண்டூர் பகுதியைச்சேர்ந்த அலிகான் (25). அதே பகுதியைச்சேர்ந்த சுபானி (25) ஆகிய இரண்டு பேரிடம் இருந்து ரூ. 68 லட்சம் பணத்தை கொடுத்து சவுகார்பேட்டைக்கு சென்று நகைகளை வாங்கி வரும்படி கூறியுள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் தனியார் டிராவல்ஸ் மூலம் குண்டூரில் இருந்து பேருந்து மூலம் கிளம்பிய அலிக்கான் சுபானி ஆகிய இருவரும் நேற்று காலை மாதவரம் ஆந்திரா பேருந்து நிலையம் வந்தனர். பின்னர் அங்கிருந்து ஆட்டோ மூலம்  கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர், லட்சுமி தெருவில் உள்ள தங்களுக்குத்தெரிந்த வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது கொடுங்கையூர் மீனாம்பாள் சாலை அருகே மாருதி டெம்போகாரில் 4 பேர் வந்து ஆட்டோவை வழிமறித்தனர். அவர்கள் தாங்கள் வருமானவரித்துறை அதிகாரிகள் என்று கூறி ஆட்டோவில் இருந்த இருவரில் அலிக்கான் என்பவரை மட்டும் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அவர் வைத்திருந்த ரூ. 68 லட்சத்தை வாங்கிக்கொண்டு மாதவரம் மணலி சாலையில் அவரை இறக்கிவிட்டு தப்பிவிட்டனர். இதுகுறித்து அலிக்கான் உரிமையாளருக்கு தகவல் கொடுத்துள்ளார். கடையின் உரிமையாளர் விசுவநாதன், நேற்று  கொடுங்கையூர் பகுதிக்கு வந்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கொடுங்கையூர் போலீசார்  வழக்கு பதிவு செய்து அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்….

The post வருமான வரித்துறை அதிகாரிகள் எனக்கூறி நகைக்கடை ஊழியர்களிடம் ரூ. 68 லட்சம் அபேஸ் appeared first on Dinakaran.

Tags : Income ,Perambur ,Andhra Pradesh ,Saukarpet ,Income Tax ,Abes ,
× RELATED ஆந்திராவில் இருந்து சென்னைக்கு...