×

ஆசியாவில் முதன் முறையாக முழுமையான நுரையீரல் உறைநீக்க அறுவை சிகிச்சை: அப்போலோ மருத்துவர்கள் சாதனை

சென்னை: ஆசியாவில் முதன் முறையாக முழுமையான நுரையீரல் உறைநீக்க அறுவை சிகிச்சையை அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரில் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.கேரளாவை சேர்ந்த 16 வயது சிறுவனுக்கு இடது நுரையீரல் பகுதியில் யு-இங் புற்றுநோய் கட்டி இருப்பது கண்டறியப்பட்டதால் கீமோதெரபியும், கதிரியக்க சிகிச்சையும் வழங்கப்பட்டன. 6 மாத காலத்திற்குள் புற்றுநோய் திரும்பவும் பாதித்திருப்பது தெரிந்தது. இதனால், சென்னையில் உள்ள அப்போலோ புரோட்டான் கேன்சர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் நோயாளிக்கு அதிவெப்ப மார்பக கீமோதெரபி மூலம் ஆசியாவின் முதல் முறையாக  முழுயைமான நுரையீரல் உறைநீக்க அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக  செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அறுவை சிகிச்சை நிபுணர் காதர் உசேன் கூறுகையில், ‘‘அதிவெப்ப மார்பக கீமோதெரபி வழிமுறை மூலம் முழுமையான நுரையீரல் உறைசீக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 18 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு மட்டுமே இத்தகைய அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. நுரையீரலில் காணப்படும் குறிப்பிட்ட சில முதன்மை மற்றும் 2ம் நிலை புற்று நோய் கட்டிகளுக்கு சிகிச்சை செய்ய இந்த தொழில்நுட்பம் இருக்கிறது. சிகிச்சை முடிந்த 3 வாரங்களுக்குள் பாதிப்பிலிருந்து மீண்டிருக்கிறார்,’’ என்றார். தலைமை செயலாக்க அதிகாரி ஹரிஷ் திரிவேதி கூறுகையில், ‘‘ஆசியாவில் முதல் முறையாக நுரையீரல் உறைநீக்க அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட மருத்துவர்கள் குழுவை பாராட்டுவதில் மகிழ்ச்சி. நிபுணத்துவம் மற்றும் உயர் செயல்நேர்த்தி என்ற அப்போலோ குழுமத்தின் அடித்தளத்தை மேலும்  வலுப்படுத்தும் வகையில் இத்தகைய சவால் மிக்க நோய் தேர்வுகளுக்கு சிகிச்சையளிக்க புற்றுநோயியலில் புகழ்பெற்ற அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் குழுவை ஒருங்கிணைத்து உருவாக்கியிருக்கிறது. …

The post ஆசியாவில் முதன் முறையாக முழுமையான நுரையீரல் உறைநீக்க அறுவை சிகிச்சை: அப்போலோ மருத்துவர்கள் சாதனை appeared first on Dinakaran.

Tags : Asia ,Apollo Doctors ,Chennai ,Apollo Proton Cancer Center ,Kerala ,Apollo ,Dinakaran ,
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...