×

கரூர் மாவட்டத்தில் வெற்றிலையில் பரவும் நோயால் விவசாயம் பாதிப்பு: நோய்க்கான மருந்து கிடைக்காததால் விவசாயிகள் கவலை..!!

கரூர்: நோய்த்தாக்கத்தால் வெற்றிலை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக கரூர் மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர். வேலாயுதம்பாளையம், புகலூர், சேமங்கே, கட்டிபாளையம், தவிட்டுபாளையம், உள்ளிட்ட பகுதிகளில் பாசன வாய்க்கால் மூலம் வெற்றிலைச்சாகுபடி செய்யப்பட்டுவருகிறது. 50 ஏக்கரில் சாகுபடி செய்த வெற்றிலையில் பரவும் நோய்களால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். வெற்றிலைக்கென்று தனியாக வாய்க்கால்கள் அமைத்து சாகுபடி செய்வதால் பசுமை மாறாமல் உள்ளதாகவும் நோய்க்கான மருந்து கிடைக்கவில்லை என்றும் அவர்கள்  கூறினர். 100 கவுளிகள் கொண்ட ஒரு சுமை வெற்றிலை ரூ.8000 வரை கடந்த மாதம் விற்பனையான நிலையில் தற்போது ரூ.5000 மட்டுமே விற்கப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 1000 ஏக்கர் வரை சாகுபடி செய்த காலம் மாறி 50 ஏக்கரில் மட்டுமே வெற்றிலையை சாகுபடி செய்வதாக அவர்கள் கூறினர். …

The post கரூர் மாவட்டத்தில் வெற்றிலையில் பரவும் நோயால் விவசாயம் பாதிப்பு: நோய்க்கான மருந்து கிடைக்காததால் விவசாயிகள் கவலை..!! appeared first on Dinakaran.

Tags : Karur district ,Karur ,Velayuthampalayam ,Bugalur ,Semange ,Kattipalayam ,Davithapalayam ,
× RELATED வேலாயுதம்பாளையம் அருகே மது விற்ற முதியவர் கைது