×

மாணவனை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கூரியர் நிறுவன ஊழியர் கைது: மேலும் 5 பேருக்கு வலை

திருவள்ளூர்: திருநின்றவூர் ரயில் நிலையத்தில் கடந்த 28ம் தேதி  மாநில கல்லூரி மாணவன் குமாரை, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 8 பேர் அழைத்துச் சென்று ராக்கிங் செய்து கொடுமைப்படுத்தினர். இதனால் மாநில கல்லூரி மாணவர் குமார், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போட்ட பிச்சையால் தன்னால் வாழ முடியாது என்று சக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஆடியோ பதிவை வெளியிட்டுவிட்டு அன்று மாலை 6 மணி அளவில் திருநின்றவூர் ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் ரயில்வே இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் குமாரை தற்கொலைக்கு தூண்டியதாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர். இதையடுத்து, பச்சைப்பன் கல்லூரி மாணவர்கள் மனோஜ்(18), ஹரிஷ்(19) ஆகிய 2 பேரையும் ரயில்வே போலீசார் கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளைச் சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து மாநில கல்லூரி மாணவர் குமாரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் 6 பேரையும்  தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், திருநின்றவூர் அண்ணா சாலை கம்பர் தெருவைச் சேர்ந்த மேகநாதன் மகன் குணசேகரன்(20) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் சென்னை கூரியர் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும், குமாரை தற்கொலை செய்து கொள்வதற்கு காரணமாக இருந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் நண்பர் என்பதும் தெரியவந்தது. மேலும் குணசேகரனும் தனது நண்பர்களான பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து மாநிலக் கல்லூரி மாணவர் குமாரை தற்கொலை செய்து கொள்வதற்கு உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. அதன்பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கிளைச் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 5 மாணவர்களை தேடி வருகின்றனர்….

The post மாணவனை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கூரியர் நிறுவன ஊழியர் கைது: மேலும் 5 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Courier ,Thiruvallur ,State College ,Kumarai ,Patchayapan College ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்