×

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில் சீறி பாய்நத காளைகள்: இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார் அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில் இன்று  காலை ஜல்லிக்கட்டு தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு பொறுப்பாளர்  கேகே.செல்ல பாண்டியன், புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வை.முத்துராஜா, கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எம்.சின்னதுரை மற்றும் நிர்வாகிகள் முன்னோடிகள் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  தமிழகத்தில் இந்த ஆண்டில் (2022) நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இதுவாகும். இதில் புதுக்கோட்டை மாவட்டம் திருச்சி மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து மாடுபிடி வீரர்கள் வருகை தந்து தங்களது பெயர்களை ஆர்வமுடன் பதிவு செய்தனர். அவர்களிடம் கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்தியதற்கான சான்றிதழ் மற்றும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் ஆகியவற்றை சரிபார்த்து அனுமதி வழங்கி வழங்கப்பட்டது. இதேபோல காளைகளையும் அதன் உரிமையாளர்கள் பதிவு செய்து டோக்கன் வழங்கப்பட்டது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் படி ஜல்லிக்கட்டு நடைபெற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இன்று நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டில் 300 மாடுபிடி வீரர்கள் மற்றும் 700 காளைகள் பங்கேற்றுள்ளன. தற்போது சீறிப்பாய்ந்த காளைகளை மாடு பிடி வீரர்கள் வீரத்துடன் அடக்கி பரிசுகளைத் தட்டிச்சென்று வருகின்றனர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அரசு கடும் கட்டுப்பாடுடன் அனுமதி வழங்கியது….

The post புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில் சீறி பாய்நத காளைகள்: இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார் அமைச்சர் ரகுபதி appeared first on Dinakaran.

Tags : Minister ,Ragupathi ,Jallikuttu competition of the ,Jallikuttu tournament ,Pudukkotta ,Jallikottu ,Dachangarochi ,Kandarvakotta, Pudukkotta district ,Jallikuttu ,Tamil Nadu Legislative Department ,Pudukkotta District ,Kandarvakotta ,Ragupati ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...