×

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக தேர்தல் பணிமனை திறப்பு: சுதர்சனம் எம்.எல்.ஏ பங்கேற்பு

புழல்: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல், அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தேர்தல் பணிமனை பாடியநல்லூரில் நேற்று திறக்கப்பட்டது. மாதவரம் சட்டமன்றத் தொகுதி சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக மற்றும் தோழமை கட்சி தேர்தல் பணிமனை திறப்பு விழா பாடியநல்லூர் மாநகர அரசு போக்குவரத்து பணிமனை அருகே நேற்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு திமுக ஒன்றிய செயலாளர் கருணாகரன் தலைமை தாங்கினார். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ கலந்துகொண்டு தேர்தல் பணிமனை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.  அப்போது அவர் பேசுகையில், ‘‘மாதவரம் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நகர் பகுதி, கிராம பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் 13 கோடி மதிப்பீட்டில், சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கடந்த ஐந்தாண்டுகளில் செய்துள்ளேன். எனவே பொதுமக்களை தொடர்ந்து சந்தித்து வருகின்ற ஒரு எம்எல்ஏ வாக நான் இருக்கிறேன். ஆகவே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து உதயசூரியனுக்கு வாக்களித்து திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வராக்க உறுதி ஏற்போம்.’’ என்றார். இவ்விழாவில், திமுக நிர்வாகிகள், திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக செங்குன்றம் – திருவள்ளூர் கூட்டு சாலையில் உள்ள நேதாஜி சிலையிலிருந்து இளைஞரணி சார்பில், மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக புறப்பட்டு தேர்தல் பணிமனை வரை சென்றனர்….

The post சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக தேர்தல் பணிமனை திறப்பு: சுதர்சனம் எம்.எல்.ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Dishagam Election Office ,Sudharshanam ,Tamil Nadu Legislative Election ,Tsagar ,Dizhagam Election ,Sudharshanam M. ,
× RELATED 33வது வார்டு திமுக வேட்பாளர்...