×

நாகலாந்தில் ஆயுதப்படை சட்டம் வாபஸ்? பரிந்துரை செய்ய ஒன்றிய குழு

கொஹிமா: நாகலாந்தில் தனிநாடு கோரும் நாகா தீவிரவாத அமைப்புகள் உள்ளன. இதனால், இந்த மாநிலத்தில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள துணை ராணுவ படைக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவதற்காக, ‘ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம்’ அமலில் உள்ளது. இந்நிலையில், இந்த மாநிலத்தில்  கடந்த 4ம் தேதி, வாகனத்தில் சென்ற அப்பாவி தொழிலாளர்கள் 13 பேரை, தீவிரவாதிகள் என நினைத்து, வீரர்கள் சுட்டு கொன்றனர். இது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. இதனால், சிறப்பு சட்டத்தை ரத்து செய்யும்படி கோரிக்கையும் வலுத்துள்ளது. இந்நிலையில், இந்த சட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக ஆராய, ஒன்றிய அரசு 4 பேர் கொண்ட குழுவை அமைக்க உள்ளது. இதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சக கூடுதல் செயலாளர் தலைமை தாங்குவார். நாகலாந்து தலைமை செயலாளர், காவல்துறை டிஜிபி உள்ளிட்டோர் இதில் இடம் பெறுகின்றனர். இக்குழு 45 நாளில் தனது அறிக்கையை சமர்பிக்க உள்ளது….

The post நாகலாந்தில் ஆயுதப்படை சட்டம் வாபஸ்? பரிந்துரை செய்ய ஒன்றிய குழு appeared first on Dinakaran.

Tags : Nagaland ,Union Committee ,Kohima ,Dinakaran ,
× RELATED தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில்...