×

மூக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டேனா? நுஸ்ரத் ஜஹான் விளக்கம்

கொல்கத்தா: நடிகையும், திரிணாமுல் காங்கிரஸ் எம்பியுமான நுஸ்ரத் ஜஹானுக்கு கடந்த ஆகஸ்டு மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு இஷான் என்று பெயரிடப்பட்டுள்ளது. முன்னதாக நிகில் ஜெயின் என்பவரை திருமணம் செய்துகொண்ட நுஸ்ரத் ஜஹான், அவரிடம் இருந்து பிரிந்து யஷ்தாஸ் குப்தாவை ரகசிய திருமணம் செய்துகொண்டார். குழந்தை பிறந்த பிறகுதான் தனது 2வது கணவர் யஷ்தாஸ் குப்தாவை பகிரங்கமாக அறிவித்தார். இந்நிலையில் நுஸ்ரத் ஜஹான் அளித்துள்ள பேட்டியில், ‘நான் எந்த தவறும் செய்யவில்லை. என் வாழ்க்கையை நானே முடிவெடுத்தேன். பலர் பலவிதமாக பேசினார்கள். அனைத்தையும் தைரியமாக எதிர்கொண்டேன். தாயாக வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக வேரூன்றியது. அதனால், நான் எடுத்த முடிவை நினைத்து பெருமைப்படுகிறேன். தற்போது நான் தாய் மட்டும் இல்லை. என் குழந்தைக்கு அப்பா மற்றும் அம்மாவாகவும் இருக்கிறேன். நான் மூக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக வெளியான தகவல்கள் உண்மை இல்லை. எனக்கு ஏற்பட்ட ஹார்மோன் மாற்றங்களால் மூக்கு அளவு மாறியுள்ளது’ என்றார்….

The post மூக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டேனா? நுஸ்ரத் ஜஹான் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Nusrat Jahan ,Kolkata ,Congress ,Akkulandi Ishan ,Dinakaran ,
× RELATED உலகின் 3வது பொருளாதார நாடு யார்...