×

ராமேஸ்வரம் மீனவர்கள் 8வது நாளாக வேலைநிறுத்தம்: திட்டமிட்டபடி ஜன. 1ல் ரயில்மறியல்

ராமேஸ்வரம்:  இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழக மீனவர்கள் 66 பேர் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகுகள் மயிலட்டி, தலைமன்னார் கடற்படை முகாம்களில் நிறுத்தப்பட்டுள்ளன. இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 19ம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கினர். இதனால் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் ஏராளமான படகுகள் ராமேஸ்வரம் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.எட்டாவது நாளாக மீனவர்களின் வேலை நிறுத்தப்போராட்டம் நேற்றும் தொடர்ந்தது. இந்நிலையில், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுக கடற்கரையில் மீனவர் எமரிட் தலைமையில் மீனவர் சங்க பிரதிநிதிகளின் அவசரக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், டெல்லி சென்று வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்தப்பின் அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு எடுக்கவும், அதுவரை வேலைநிறுத்தத்தை தொடரவும் முடிவு எடுக்கப்பட்டது. மேலும் திட்டமிட்டபடி ஜன. 1ம் தேதி தங்கச்சிமடத்தில் ரயில் மறியல் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது….

The post ராமேஸ்வரம் மீனவர்கள் 8வது நாளாக வேலைநிறுத்தம்: திட்டமிட்டபடி ஜன. 1ல் ரயில்மறியல் appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Tamil Nadu ,Sri Lanka Navy ,Jaffna ,Vavuniya ,Dinakaran ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிப்பு இளநீர் விலை கிடுகிடு: ரூ.70க்கு விற்பனை