×

பெங்களூருவில் வழிப்பறி திருச்சி கும்பல் கைது: 42 வழக்கில் தொடர்புடையவர்கள்

பெங்களூரு: பெங்களூரு ஒயிட்பீல்டு, மகாதேவபுரா உள்பட பல்வேறு இடங்களில் லேப்டாப், செல்போன் திருடுபோனது. இதையடுத்து கிழக்கு மண்டல போலீசார் சார்பில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி நேற்று முன்தினம் 7 பேர் கும்பலை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் தமிழக மாநிலம் திருச்சி மாவட்டம் ராம்ஜி நகர் பகுதியை சேர்ந்த ரஜினி (48), சுந்தர் (40), செந்தில் குமார் (46), கோபால் (39), வெங்கடேஷ் (48), சுப்பிரமணி (55), சிவகுமார் (40), முரளி (33), மூர்த்தி  (27), முருகானந்தம் (28), குமார்  (48) என்று தெரியவந்தது. இவர்கள் கவனத்தை திசை திருப்பி நகை, பணத்தை பறித்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.இது தவிர லேப்டாப், செல்போன், வழிப்பறி, கொள்ளையிலும் ஈடுபட்டு வந்தனர். மொத்தம் 42 வழக்கில் தொடர்புடையவர்கள் என்று தெரியவந்துள்ளது. கைதானவர்களிடம் இருந்து 7 லேப்டாப், ஒரு ஐ போன், கேமரா, ரூ.50 ஆயிரம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். …

The post பெங்களூருவில் வழிப்பறி திருச்சி கும்பல் கைது: 42 வழக்கில் தொடர்புடையவர்கள் appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Bangalore Whitefield ,Mahadevapura ,Eastern Zone Police ,Dinakaran ,
× RELATED சிமென்ட் கலவை லாரி தீப்பிடித்ததால் பரபரப்பு