×

சிசிடிவி கேமரா அமைப்பது எதற்காக?குட்டிக்கதை கூறி எஸ்பி விளக்கம்

மயிலாடுதுறை : மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பெசன்ட் நகரில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு குடியிருப்போர் சங்கத்தினர் ஒன்றிணைந்து ரூ.1.50 லட்சம் மதிப்பில் நகரில் அனைத்து வீதிகளிலும் 14 இடங்களில் சிசிடிவி கேமராக்களை பொறுத்தினர். அதன் தொடக்க விழா நலசங்க தலைவர் சங்கர் தலைமை நடந்தது. ஏடிஎஸ்பி தங்கவேல். டிஎஸ்பி வசந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்.பி.சுகுணாசிங் சிசிடிவி செயல்பாட்டை தொடங்கிவைத்து பேசுகையில்,குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை அடையாளம் காண்பதற்கு மிகவும் பயன்உள்ளதாக இந்த சிசிடிவி கேமராக்கள் காவல்துறைக்கு உதவியாக இருந்து வருகிறது. செல்போன் மூலம் குடியிருப்புவாசிகள் அனைவரும் கண்காணிப்பதற்கான நவீன வசதிகளையும் ஏற்படுத்தி இருப்பது மிகவும் பயனாக இருக்கும், சமீபத்தில் உண்மைச் சம்பவம், நான் எதிர்பாராவிதமாக தஞ்சையிலிருந்து மயிலாடுதுறைக்கு விரைவு ரயில் மூலம் வந்துகொண்டிருந்தேன், எனக்கு எதிர்புறம் 2 பெண்களுடன் ஒரு தம்பதி அமர்ந்திருந்தனர், அந்த சமயத்தில் 3 இளைஞர்கள் அங்கே வந்து அந்த இரு பெண்களையும் கேலியும் கிண்டலும் செய்துகொண்டிருந்தனர். நான் அமைதியாகப் பார்த்துகொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் எல்லை மீறி பேசினர், பெண்ணின் தந்தையால் எதுவும் சொல்ல முடியாமல் அவமானத்தால் குன்றிபோய் இதற்குதான் ரிசர்வேஷனில் போகலாம் என்றேன் நீ கேட்கவில்லை என்று தன் மனைவியை கோபமாகத் திட்டித்தீர்த்தார். அந்தக் குடும்பமே அவமானத்தால் நொடிந்து போய்விட்டனர். எனக்கு பாதுகாப்பிற்கு போலீசும் இல்லை, நானும் யூனிபாரிமிலும் இல்லை. அதனால் அந்த இளைஞர்களின் நடவடிக்கை எல்லை மீறி போய்கொண்டிருந்தது, அதற்குள் ரயில் மயிலாடுதுறைக்கு வந்தது, திடீரென 10க்கும் மேற்பட்ட ரயில்வே போலீசார் குறிப்பிட்ட அந்த பெட்டிக்குள் நுழைந்து அந்த இளைஞர்களை சுற்றி வளைத்துப்பிடித்து எனக்கு வணக்கம் செலுத்திவிட்டு அவர்களை அழைத்துச் சென்றனர். அந்த நேரத்தில் அந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கண்களில் தெரிந்த ஆனந்தக் கண்ணீர் இன்னும் என் கண்முன்னே இருக்கிறது.நான்தான் செல்போன்மூலம் தகவல் அளித்திருந்தேன் என அவர்கள் தெரிந்து நன்றி கூறினர். என்னால் அந்த நிகழ்ச்சியை மறக்க முடியவில்லை என்றார்.இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் சிவராமன், இன்ஸ்பெக்டர்கள் செல்வம், சதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். செயற்குழு உறுப்பினர் துரைமுருகன் வரவேற்றார். செயலாளர் மணி நன்றி கூறினார்….

The post சிசிடிவி கேமரா அமைப்பது எதற்காக?குட்டிக்கதை கூறி எஸ்பி விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Mayaladududurai ,Besant, Mayaladudurai ,Union ,
× RELATED மோசடி குறுஞ்செய்திகளை அனுப்பிய...