×

சமூக வலைதளங்களில் அவதூறு மாநகராட்சி பெண் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆவடி: ஆவடி மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் மகளிர் சுய உதவி குழுக்களைச் சார்ந்த 260பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தினசரி ஊதியமாக ரூ.300 வழங்கப்படுகிறது. இவர்கள், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, காய்ச்சல் கணக்கெடுப்பு, கபசுர குடிநீர் வழங்கல், கொரோனா வைரஸ் தொற்று விழிப்புணர்வு, தடுப்பூசி விழிப்புணர்வு உள்ளிட்ட பணிகளில் 2ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இவர்களில் சிலர் ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் கணனி பிரிவிலும் பணியாற்றி வருகின்றனர். இப்பணியில் உள்ள இரு பெண் ஊழியர்களை வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அவதூறாக செய்து தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. இதனையடுத்து, நேற்று முன்தினம் பெண் ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில் திரண்டனர்.  பின்னர், அவர்கள் அவதூறு பரப்பிய நபர்களை கைது செய்யக்கோரி கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால், அங்கு பதற்றம் பரபரப்பு ஏற்பட்டது தகவலறிந்து ஆவடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர்,  போலீசார் அவர்களிடம் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். அப்போது பெண் ஊழியர்கள் அவதூறு பரப்பிய நபர்களை கைது செய்தால்தான் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்வோம் என திட்டவட்டமாகக் கூறினர். இதனையடுத்து போலீசார் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து, பெண் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும்,  பாதிக்கப்பட்ட இரு பெண் ஊழியர்களும் சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்திலும், ஆவடி காவல் நிலையத்திலும் புகார் அளித்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது….

The post சமூக வலைதளங்களில் அவதூறு மாநகராட்சி பெண் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : social media Corporation ,Avadi ,Avadi Corporation ,Dinakaran ,
× RELATED சென்னை ஆவடியில் சித்த மருத்துவர்...