×

நாடாளுமன்ற துளிகள்: எத்தனை செயற்கைக்கோள்?

திமுக எம்பி ராஜேஷ் குமார் மாநிலங்களவையில் நேற்று எழுத்துப்பூர்வ கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். அதில், ‘இந்திய ராக்கெட் மூலமாக எத்தனை செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. அதனால் அரசாங்கம் பெற்ற வருமானம் எவ்வளவு? மேலும், இந்த செயற்கைகோள்கள் கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் எந்தெந்த நாடுகளில் இருந்து அனுப்பப்பட்டது?’ என கேட்டார்.இதற்கு ஒன்றிய அமைச்சர் ஜிஜேந்தர் சிங் அளித்துள்ள பதிலில், ‘பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் 1999ம் ஆண்டு 342 செயற்கைக்கோள் அனுப்பப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் உதவியோடு 34 நாடுகள் செயற்கைக்கோள்களை விண்ணில் அனுப்பியுள்ளது. இதில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இந்தியா இதனால் நல்ல லாபம் அடைந்துள்ளது. குறிப்பாக, இந்திய மதிப்பின்படி ரூ.350 கோடி அளவில் செயற்கைக்கோள்கள் வாயிலாக இஸ்ரோ வருமானம் ஈட்டியுள்ளது. அதிகப்பட்சமாக அமெரிக்கா 226, கனடா 12 செயற்கைக்கோள்களைஅனுப்பி உள்ளது,’ என தெரிவித்துள்ளார்.* அணுசக்தி திட்டங்களின் தற்போதைய நிலை என்னகூடங்குளம், கல்பாக்கம் திட்டம்கூடங்குளம், கல்பாக்கத்தில் அணுசக்தி திட்டப்பணிகளின் செயல்பாடுகளின் நிலவரம் என்ன என்பது குறித்து மக்களவையில் திமுக எம்பி கதிர் ஆனந்த் நேற்று கேள்வி எழுப்பினார். அதில், ‘கூடங்குளத்திலுள்ள அணுமின் நிலையம் 3 மற்றும் 4 அலகு, கல்பாக்கத்தில் உள்ள விரைவு உலை எரிபொருள் சுழற்சி வசதித் திட்டம் ஆகியவற்றின் தற்போதைய நிலை, இந்த திட்டங்களை முடிப்பதற்கான தோராயமான நேரம் என்ன? என்று கேட்டார்.அதற்கு பதிலளித்த அணுசக்தி மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கான இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், ‘நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் செயல்படுத்தி வரும் திட்டப் பணிகள் நவம்பர், 2021 நிலவரப்படி 54.96 சதவீதம் நிறைவடைந்துள்ளது. கூடங்குளம் 3, 4 திட்டத்தின் அலகுகள் முறையே மார்ச் 2023 மற்றும் நவம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கல்பாக்கத்தில் பாஸ்ட் ரியாக்டர் எரிபொருள் சுழற்சி வசதி திட்டம் தற்போது அணுசக்தி மறுசுழற்சி வாரியம், பாபா அணு ஆராய்ச்சி மையம் அணுசக்தி துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது. நவம்பர் 30, 2021 நிலவரப்படி திட்டத்தின் நிதி முன்னேற்றம் 32 சதவீதமாகும். மேலும், திட்டம் டிசம்பர் 2027க்குள் நிறைவடையும்,’ என கூறியுள்ளார்.* தமிழக மாணவிக்கு நிதியுதவி தென் சென்னை தொகுதி திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், டெல்லியில் ஒன்றிய தகவல் ஒலிபரப்பு, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூரை சந்தித்து தமிழக மாணவி ஒருவரின் மேற்படிப்புக்கு நிதி உதவி வழங்க கோரிக்கை மனு வழங்கினார். அதில், ‘தமிழகத்தைச் சேர்ந்த உதயகீர்த்திகா தாமோதரன் என்கிற மாணவி கனடாவில் உள்ள பிரபல ‘ஏர் அகாடமி’யில் படிப்பதற்கு தேர்வு பெற்றுள்ளார். அவர் தனது துறையில் மிகவும் திறமையானவர். இஸ்ரோ நடத்திய மாநில அளவிலான பல போட்டிகளில் வெற்றி பெற்றவர். உக்ரைன் பல்கலைக் கழத்தில் இளநிலை பொறியியல் பட்டத்துடன் விமான பராமரிப்பு நிபுணத்துவ தொழில்நுட்ப வல்லுனர்’ என்ற சிறப்பு பட்டத்தையும் பெற்றுள்ளார். மேலும் விண்வெளி வீரருக்கான பயிற்சியையும் முடித்துள்ளார். அதேப்போன்று போலந்து ராணுவ நிறுவனத்தில் ராக்கெட் தொடர்பான விஷயங்களையும் கற்றுத் தேர்ந்துள்ளார். இதை வெற்றிகரமாக முடித்த முதல் பெண் இவர்தான்.  அவர் இஸ்ரோவில் பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தில் தான் தற்போது கனடாவில் விமானி பயிற்சிக்கு சேர இருக்கிறார். அவரது படிப்புக்கான மொத்த செலவு, கல்விக்கட்டணம் – தங்குமிடம் உள்பட ரூ.50 லட்சமாகும். இதில் ரூ.21 லட்சத்தை எப்படியோ திரட்டிவிட்டார். இன்னும் ரூ.29 லட்சம் அவருக்கு தேவைப்படுகிறது. எனவே, ஒன்றிய அரசு நிதி உதவி வழங்கினால் அவர் படிப்பை தொடர வசதியாக இருக்கும். அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என தெரிவித்துள்ளார்.* விண்வெளி துறையில் தனியார்மாநிலங்களவையில் திமுக எம்பி வில்சன் எழுத்துப்பூர்வமாக, ‘இந்திய விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களை பங்கேற்க செய்ய ஏதேனும் திட்டம் உள்ளதா? அப்படி இருக்கும் பட்சத்தில் அவை எவ்வாறு நடைமுறைப் படுத்தப்படவுள்ளது?. விண்வெளி கல்வி மற்றும் வானூர்தி பொறியியல் படிப்புகளுக்கு நிதியளித்து ஊக்குவிப்பது, விண்வெளி ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு தேவையான வசதிகளை எப்படி உருவாக்க திட்டமிட்டுள்ளீர்கள்?’ என கேள்வி கேட்டிருந்தார்.அதற்கு பதிலளித்த ஒன்றிய அமைச்சர் ஜிஜேந்திர சிங், ‘விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களை பங்கேற்க செய்யும் திட்டம் கண்டிப்பாக உள்ளது. ஆனால், அது ஒரு மிகப்பெரிய திட்டம். அதற்கான அனைத்து முயற்சிகளையும் ஒன்றிய அரசு செய்து வருகிறது. இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் இஸ்ரோ மூலம் செய்து வரப்படுகிறது. இதன் மூலம், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் திட்டம் உள்ளது. குறிப்பாக, இதற்கான சிறப்பு வேலைகளை சென்னை ஐ.ஐ.டி செய்து வருகிறது. இதில் சேருபவர்கள் பயனடையும் விதமாக பல்வேறு பாடத்திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து விரைவில் அரசு ஒரு முடிவை மேற்கொள்ளும்,’ என தெரிவித்துள்ளார். …

The post நாடாளுமன்ற துளிகள்: எத்தனை செயற்கைக்கோள்? appeared first on Dinakaran.

Tags : Thisagam ,Rajesh Kumar ,Dinakaran ,
× RELATED குளத்தில் மூழ்கி சகோதரிகள் பலி