×

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு வேளாண் பயிற்சிக்காக ரூ.1.70 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை முதன்மை செயலாளர் மணிவாசன் நேற்று வெளியிட்டுள்ள அரசு உத்தரவு: 2021-22ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவித்தபடி 5000 ஆதிதிராவிடர் மற்றும் 2500 பழங்குடியின விவசாயிகளுக்கு தோட்டக்கலை, வேளாண் காடுகள், நர்சரி செடிகள் மற்றும் வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கம் போன்ற பயிற்சிகள் வழங்கிடும் பொருட்டு ஆதி திராவிடர் இனத்தை சேர்ந்த 2200 விவசாயிகள் மற்றும்  பழங்குடியினர் இனத்தை சேர்ந்த 800 விவசாயிகள் உள்ளிட்ட, 3000 விவசாயிகளுக்கு ஒரு விவசாயிக்கு ரூ.2000 வீதம் 3000 விவசாயிகளுக்கு  ரூ.60 லட்சத்தில் தோட்டக்கலை பயிற்சியும்  (2 நாள் பயிற்சி), ஆதி திராவிடர் இனத்தை சேர்ந்த 200 விவசாயிகள் மற்றும்  பழங்குடியினர் இனத்தை சேர்ந்த 800 விவசாயிகள் உள்ளிட்ட 1000 விவசாயிகளுக்கு  ஒரு விவசாயிக்கு ரூ.4000 வீதம் 1000 விவசாயிகளுக்கு  ரூ.40 லட்சத்தில் வனத்துறை பயிற்சியும் (2 நாள் பயிற்சி), மேலும் ஆதி திராவிடர் இனத்தை சேர்ந்த 2600 விவசாயிகள் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த 900 விவசாயிகள் உள்ளிட்ட 3500 விவசாயிகளுக்கு ஒரு விவசாயிக்கு ரூ.2000 வீதம் 3500 விவசாயிகளுக்கு ரூ.70 லட்சத்தில் வேளாண் பொறியியல் பயிற்சியும் (3 நாள் பயிற்சி) வழங்க ரூ.1.70 கோடி விடுவிக்க நிர்வாக ஒப்பளிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

The post ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு வேளாண் பயிற்சிக்காக ரூ.1.70 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Adi Dravidian ,Tamil Nadu ,Govt ,Chennai ,Adi Dravidar and Tribal Welfare Department ,Principal Secretary ,Manivasan ,
× RELATED சதுப்பு நிலங்களை அடையாளம் காணும்...