×

தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 36 மாவட்டங்களில் 70 புதிய கூட்டுறவு மருந்தகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 36 மாவட்டங்களில் 70 புதிய கூட்டுறவு மருந்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். கூட்டுறவு துறையின் 2021-22ம் ஆண்டு மானிய கோரிக்கையில், தமிழ்நாட்டில் கூட்டுறவு துறை மூலம் 303 மருந்தகங்களில் விற்கப்படும் மருந்துகளுக்கு 20 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த மருந்தகங்கள் நியாயவிலை கடைகள் போல வெளிச்சந்தைகளில் மருந்து பொருட்களின் விலைகளை கட்டுக்குள் வைத்திருக்கும் மிகவும் முக்கியமான சமூக பங்காற்றுகின்றன. இந்த எண்ணிக்கையை அடுத்த 5 ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு 60 கடைகள் வீதம் மொத்தம் 600 ஆக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தலைமை செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், கூட்டுறவு துறை சார்பில் தமிழகத்தின் 36 மாவட்டங்களில் 70 புதிய கூட்டுறவு மருந்தகங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். இந்த கூட்டுறவு மருந்தகங்கள் இயங்கி வரும் பகுதிகளில் தனியார் மருந்து கடைகளும் போட்டியின் காரணமாக விலை குறைப்பு செய்து விற்பனை செய்து வருகின்றன.இதனால், கூட்டுறவு துறை மூலம் நடத்தப்படும் மருந்தகங்களுக்கு பொதுமக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. தனியார் மருந்தகங்களுக்கு நிகராக புதிதாக தொடங்கப்பட்டுள்ள மருந்தகங்கள் சிறந்த பொலிவுடன் விளங்கிட அவற்றில் கணினி மற்றும் குளிர்சாதன வசதிகள் உள்ளிட்ட போதுமான உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மருந்தகத்திலும் ஒரு மருந்தாளுநர் மற்றும் உதவியாளர் பணியில் இருப்பர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி, ஆ.வெங்கடேசன், மு.பூமிநாதன், தலைமை செயலாளர் வெ.இறையன்பு, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமை செயலாளர் முகமது நசிமுத்தின், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் அனீஷ் சேகர், கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) அருணா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.மருந்துகள் வீடுகளுக்கு டெலிவரிசென்னையில் நேற்று புதிதாக சென்னை, மயிலாப்பூர் ராமகிருஷ்ணாசாலை, ராயப்பேட்டை  லட்சுமிபுரம் பகுதியில் டியுசிஎஸ் சொந்த கட்டிடத்தில் புதிதாக 2 கடைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று  திறந்து வைத்தார்.  இந்த விழாவில் சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர்  சிற்றரசு, மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ த.வேலு புதிய மருந்தக கடைகளில் குத்து  விளக்கு ஏற்றினர். இதுகுறித்து, டியுசிஎஸ் பொது மேலாளர் எஸ்.பாபு கூறும்போது, ‘டியுசிஎஸ் மருந்தகங்களில் 20 சதவீதம் தள்ளுபடியில் பொதுமக்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்படும். குறிப்பிட்ட தூரம் வரைக்கும் வீடுகளுக்கே சென்று மருந்து வழங்கப்படுகிறது. கூட்டுறவு கடைகளில் இல்லாத மருந்துகளை பொதுமக்கள் கேட்டால், வெளியில் வாங்கி கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றார்….

The post தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 36 மாவட்டங்களில் 70 புதிய கூட்டுறவு மருந்தகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Nadu ,CM G.K. Stalin ,Chennai ,CM M ,Tamil Nadu ,G.K. Stalin ,CM ,Dinakaran ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...