×

இந்திய ஊடகவெளியில் இன்று ‘புலனாய்வு இதழியல்’ மறைந்து வருகிறது; சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கருத்து

ஐதராபாத்: இந்திய ஊடகவெளியில் ‘புலனாய்வு இதழியல்’ என்பது தற்போது மறைந்து வருவதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறினார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த பத்திரிகையாளர் சுதாகர் ரெட்டி என்பவர் எழுதிய ‘ப்ளட் சேன்டர்ஸ்’ என்ற புத்தக வெளியீட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா காணொலி மூலம் விழாவில் பங்கேற்றுப் பேசுகையில், ‘கருத்துச் சுதந்திரம் மற்றும் இன்றைய ஊடக நிலை குறித்து சில கருத்துகளை முன்வைக்க விரும்புகிறேன். இந்திய ஊடகவெளியில் புலனாய்வு என்ற கருத்தாக்கம் துரதிருஷ்டவசமாக மறைந்துவருகிறது. நாங்கள் வளர்ந்த காலகட்டத்தில், பெரிய ஊழல்களை வெளிக்கொண்டுவரும் பத்திரிகைகளை ஆர்வத்துடன் பார்ப்போம். அந்தக் காலகட்டத்தில் நாளிதழ்கள் எங்களை ஏமாற்றியதில்லை. அப்போது சமூகத்தில் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மிகப்பெரிய ஊழல்களை பத்திரிகைகள் வெளிக்கொண்டு வந்தன. ஆனால், இன்று ஒன்றிரண்டை தவிர வேறு எந்தப் பரிமாணத்தையும் என்னால் நினைவுகூர முடியவில்லை. தனிநபர்கள், நிறுவனங்களின் கூட்டுத் தோல்வி ஊடகத்தால் வெளிப்படுத்தப்பட வேண்டும். இந்த அமைப்பில் நிலவும் குறைபாடுகள் குறித்தும் பொதுமக்களுக்கு ஊடகம் உணர்த்த வேண்டும். இந்தியாவில் புலனாய்வு இதழியல் மறைந்து வருகிறது. இதுகுறித்து உங்களது முடிவை உங்களிடமே ஒப்படைக்கிறேன். இந்த பிரச்னையில் உங்கள் சொந்த கருத்தை உருவாக்க விரும்புகிறேன்’ என்றார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, தனது வாழ்க்கையை தெலுங்கு நாளிதழில் ஒன்றில் பத்திரிகையாளராக தொடங்கினார். இவரும், ‘ப்ளட் சேன்டர்ஸ்’ புத்தகத்தை எழுதிய சுதாகர் ரெட்டியும் ஆந்திராவின் அடுத்தடுத்த கிராமத்தில் வசித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் புத்தக வெளியீட்டில் கலந்து கொண்ட என்.வி.ரமணா, ‘எனது சொந்த கிராமத்திற்கு விரைவில் செல்ல உள்ளேன். ஆந்திரத்தின் சேஷாசலம் வனப் பகுதியில் வளரும் செம்மரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தினார்….

The post இந்திய ஊடகவெளியில் இன்று ‘புலனாய்வு இதழியல்’ மறைந்து வருகிறது; சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கருத்து appeared first on Dinakaran.

Tags : Chief Justice ,Supreme Court ,Hyderabad ,NV ,Ramana ,Telangana… ,Dinakaran ,
× RELATED உச்சநீதிமன்ற வழக்கு விவரங்கள் இனி...