×

அருணாச்சல பிரதேசத்துக்கு சென்ற வெங்கையாவுக்கு சீனா எதிர்ப்பு

பிஜீங்: அருணாச்சல பிரதேசத்துக்கு சென்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியா – சீனா இடையிலான 3,488 கிமீ எல்லையின் பல பகுதிகளில், சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. வடகிழக்கு மாநிலமான அருணாசல பிரதேசமும் தனக்கு சொந்தமான தெற்கு திபெத் பகுதிதான் என்றும் கூறி வருகிறது. இந்நிலையில், அருணாச்சல பிரதேச மாநில சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கடந்த 9ம் தேதி கலந்து கொண்டு உரையாற்றினார். இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் நேற்று அளித்த பேட்டியில், ‘அருணாசல பிரதேசத்துக்கு எந்த இந்திய தலைவர் வருதையும் ஏற்க முடியாது. அந்த மாநிலத்தை சீனா அங்கீகரிக்கவில்லை. எல்லை பிரச்னையில் சீனாவின் நிலைப்பாடு தெளிவானது. இந்திய அரசால் ஒருதலைப்பட்சமாகவும், சட்ட விரோதமாகவும் நிறுவப்பட்ட அருணாசல பிரதேசத்தை சீன அரசு ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை. மேலும், அப்பகுதிக்கு இந்திய தலைவர்கள் வருகையை எதிர்க்கிறோம்,’ என்று கூறினார்….

The post அருணாச்சல பிரதேசத்துக்கு சென்ற வெங்கையாவுக்கு சீனா எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : China ,Venkaiya ,Arunachal Pradesh ,Fiji ,Vice President Venkaya Naidu ,India ,Dinakaran ,
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை...