×

வாகன சோதனையில் கொள்ளையர்கள் கைது

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை – சத்தியவேடு சாலையில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்களிடம் லைசென்ஸ் ஆவணங்கள் காட்டுமாறு கேட்டனர்.  அதற்கு  அவர்கள்  முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். கவரப்பேட்டை போலீசார் அவர்களை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்ததில் புதுகும்மிடிப்பூண்டியை சேர்ந்த நவீன்(24), ஜெய் சூர்யா (26) என்று தெரியவந்தது. கடந்த ஜூன் மாதம் சோம்பட்டு பகுதியைச் சேர்ந்த பிரியா என்ற பெண்ணிடம் 5 சவரன்  சங்கிலியை பறித்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 4 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கவரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவுசெய்து  இருவரையும் கைது செய்தனர்.   …

The post வாகன சோதனையில் கொள்ளையர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Kummidipoondi ,Kavarappet - Sathyavedu road ,Dinakaran ,
× RELATED ரசாயன கல் மூலம் பழுக்க வைத்த 1.5 டன் மாம்பழம் பறிமுதல்