×

விபத்தில் சிக்கிய வாலிபரை மீட்டு காரில் மருத்துவமனை அழைத்து சென்ற அமைச்சர்

சென்னை: விபத்தில் சிக்கிய வாலிபரை மீட்டு, காரில் பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.  பூந்தமல்லி அருகே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை பைக்கில் சென்ற வாலிபர் மீது கார் மோதியது. இதில் அவர் கீழே விழுந்து படுகாயமடைந்து, சாலையில் துடிதுடித்தபடி கிடந்தார். அப்போது அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்த னர். ஆம்புலன்ஸ் வர தாமதமானது. இந்நிலையில் அந்த வழியாக கிருஷ்ணகிரி நோக்கி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்று கொண்டிருந்தார். விபத்தில் சிக்கி வலியால் துடித்து கொண்டிருந்த வாலிபரை கண்டதும் காரை சாலையின் ஓரமாக நிறுத்தினார். அந்த வாலிபரை மீட்டார். அதுவரையிலும் ஆம்புலன்ஸ் வரவில்லை. எனவே அந்த வாலிபரை தனது காரிலேயே பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அமைச்சர் அனுப்பிவைத்தார். விசாரணையில், அவர் பூந்தமல்லி மேல்மாநகரை சேர்ந்த ராஜேந்திரன் (23), தனியார் நிறுவன ஊழியர் என்பது தெரிந்தது. வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும்போது விபத்தில் சிக்கியுள்ளார்.  இந்த சம்பவத்தை அந்த வழியே சென்ற வாகன ஓட்டிகள் தங்களது செல்போன்களில் படம் பிடித்தனர். விபத்தில் சிக்கிய நபருக்கு அமைச்சர் தனது காரிலேயே அழைத்து சென்று மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது….

The post விபத்தில் சிக்கிய வாலிபரை மீட்டு காரில் மருத்துவமனை அழைத்து சென்ற அமைச்சர் appeared first on Dinakaran.

Tags : Chennai ,People's Welfare Minister ,Maharashtriya Maharashi ,Poonthamalli Government Hospital ,Suframanian ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஆய்வு