×

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு செல்போன்: கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிஸ் வெளியிட்ட அறிக்கை: பார்வையற்றோர் மற்றும் வாய்பேச இயலாத செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட செல்போன் 2020-2021ம் நிதியாண்டு முதல் வழங்கப்பட உள்ளது. செல்போன் பெற விரும்புவோர், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றவராகவும், 18 வயது நிரம்பிய இளங்கலை பயிலும் மாணவ, மாணவியராகவோ, வேலைவாய்ப்பற்ற பட்டதாரி மாணவ, மாணவியராகவோ, சுயதொழில் மற்றும் தனியர் துறையில் பணிபுரிபவராகவோ இருக்கவேண்டும். மத்திய மற்றும் மாநில அரசு துறையில் பணிபுரியும் மாற்றுத் திறனாளி ஊழியர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது. மேலே குறிப்பிட்ட தகுதிகள் உடைய  மாற்றுத் திறனாளிகள், தங்களது தேசிய அடையாள அட்டை (அனைத்து பக்கங்களும்), உணவு பொருள் வழங்கல் அட்டை (ரேஷன் கார்டு), ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் சான்றிதழ்கள், சுயதொழில் அடையாள அட்டை, கல்லூரியில் மாணவராக இருந்தால் அதற்கான சான்று, சுயதொழில் புரிவதற்கான சான்று, வேலை வாய்ப்பற்ற பட்டதாரிகள், பட்டய சான்றிதழ் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், ஜிஎஸ்டி ரோடு செங்கல்பட்டு 603-001 என்ற முகவரியில் வரும் 11ம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமோ விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தின் 044-27431853 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது….

The post மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு செல்போன்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : John Louis ,Dinakaran ,
× RELATED சந்தனத்தின் மருத்துவ குணங்கள்!