×

ஒலிம்பிக்கில் முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்ட மகளிருக்கான ஸ்கேட் போர்டிங் : 13 வயது சிறுமி தங்கம் வென்று சாதனை

டோக்கியோ : ஒலிம்பிக்கில் முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்ட மகளிருக்கான ஸ்கேட் போர்டிங் விளையாட்டில் ஜப்பானைச் சேர்ந்த 13 வயது சிறுமி தங்கம் வென்று சாதனை படைத்தார். சர்பிங், ஸ்போர்ட் கிளைம்பிங், கராத்தே ஆகியவற்றுடன் கன்னி போட்டியாக டோக்கியோ ஒலிம்பிக்கில் இடம் பிடித்தது ஸ்கேட் போர்டிங். நம் ஊரில் காலில் சக்கரங்களை கட்டி கொண்டு விளையாடப்படும் ஸ்கேட்டிங்கை போன்ற இந்த விளையாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 20 வீராங்கனைகள் போட்டியிட்டனர். அதில் தகுதி போட்டிகள் மூலம் 8 வீராங்கனைகள் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர். அதில் ஜப்பானைச் சேர்ந்த நிஷியா என்ற சிறுமி தனக்கு உரிய பாணியில் சாகசம் செய்து முதலிடம் பிடித்தார். 13 வயது 330 நாட்களில் மாமிஜி நிஷியா இந்த சிறப்பை பெற்றுள்ளார். அதே சமயம் பிரேசிலைச் சேர்ந்த ராஐஸா லீ என்ற சிறுமி இப்பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.இவர் 13 வயது 203 நாட்களில் இச்சிறப்பை பெற்றதன் மூலம் ஒலிம்பிக் தனிநபர் போட்டியில் பதக்கம் வென்ற இளம் வீராங்கனை என்ற வரலாற்று பதிவை செய்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்ப்ரிங் போர்டு வீராங்கனை மெர்ஜோரி 13 வயது 268 நாட்களில் பதக்கம் வென்றதே இதற்கு முன்னர் வரை சாதனையாக இருந்து வந்தது. அதனை தற்போது பிரேசிலின் ராய்சா முறியடித்துள்ளார். ஸ்கேட் போர்டிங் வெண்கலம் பதக்கம் வென்ற ஜப்பானின் நாகயமாவுக்கு 16 வயதே ஆகிறது.  …

The post ஒலிம்பிக்கில் முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்ட மகளிருக்கான ஸ்கேட் போர்டிங் : 13 வயது சிறுமி தங்கம் வென்று சாதனை appeared first on Dinakaran.

Tags : Olympics ,Tokyo ,Japan ,Dinakaran ,
× RELATED பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம்...