×

2020-2021ம் நிதியாண்டில் ரூ.11,896 கோடி எல்பிஜி சிலிண்டருக்கான மானியம் வழங்கி உள்ளோம் : ஒன்றிய அரசு அறிவிப்பு!!

டெல்லி : கடந்த நிதியாண்டில் எல்பிஜி சிலிண்டருக்கான மானியம் ரூ.11,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் ரமேஷ்வர் டெலி பதில் அளித்துள்ளார். நாடு முழுவதும் எல்பிஜி எரிவாயு இணைப்பு எத்தனை பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது? மானியத்தை தாமே முன்வந்து விட்டுக் கொடுத்தது எத்தனை பேர் என ஒன்றிய அமைச்சருக்கு மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு ஒன்றிய அமைச்சர் ரமேஷ்வர் அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில், கடந்த மார்ச் மாத நிலவரப்படி 29.95 வாடிக்கையாளர்கள் உள்ளதாகவும் 1.08 கோடி பேர் மானியத்தை விட்டு கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். 2015 -2016 முதல் மானியம் வழங்கியதை பட்டியலிட்ட அவர், 2020-2021ம் நிதியாண்டில் 11,896 கோடி ரூபாய் மானியம் வழங்கி உள்ளதாக கூறியுள்ளார்.இதன் மூலம் எல்பிஜி வாடிக்கையாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த நிதியாண்டில் எல்பிஜி வாடிக்கையாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த நிதியாண்டில் எல்பிஜி சிலிண்டருக்கான மானியம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதே போல மானியம் அல்லாத எல்பிஜி சிலிண்டர் மற்றும் மானியம் விட்டுக் கொடுப்பு வகையில், 2015 முதல் தற்போது வரை ரூ.57,768 கோடி கிடைத்துள்ளதாக ரமேஷ்வர் டெலி பதில் அளித்துள்ளார்.   …

The post 2020-2021ம் நிதியாண்டில் ரூ.11,896 கோடி எல்பிஜி சிலிண்டருக்கான மானியம் வழங்கி உள்ளோம் : ஒன்றிய அரசு அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Union Government ,Delhi ,Union Minister ,Rameshwar Delhi ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணிக்கை நாள் அன்று...