×

விருதுநகரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய திராவிட மாடல் புத்தகம் வெளியீடு

சென்னை: விருதுநகரில் வருகிற 15ம் தேதி நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய ‘திராவிட மாடல்’ புத்தகம் வெளியிடப்படுகிறது. தனது ஆட்சியின் இலக்கணமாக ‘திராவிட மாடல்’ என்ற கோட்பாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்து முழங்கி வருகிறார். இது தொடர்பாக பல்வேறு கூட்டங்களில் அவர் ஆற்றிய உரைகளின் மையக் கருத்தைத் தொகுத்து திமுக தலைமைக் கழகம் சார்பில் நூல் வெளியிட உள்ளது. திராவிட மாடல் என்பது எல்லார்க்கும் எல்லாம் என்ற உன்னதத் தத்துவத்தை உள்ளடக்கமாக கொண்டது ஆகும். இது தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் அளித்துள்ள விளக்கங்களின் தொகுப்பு தான் இந்த நூல். 144 பக்கம் கொண்ட இந்நூலை திமுக தலைமைக் கழகம் வெளியிட உள்ளது. விருதுநகரில் வருகிற 15ம் தேதி நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் ‘திராவிட மாடல்’ நூலை வெளியிடுகிறார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு முதல் நூலை பெற்றுக் கொள்கிறார்….

The post விருதுநகரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய திராவிட மாடல் புத்தகம் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Principal ,Mukhera ,Virudunagar ,Stalin ,Chennai ,Thirty Festival ,Dizhagam ,Vrududnagar ,G.K. ,Dinakaran ,
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்