×

மாமல்லபுரம் பகுதியில் மத்திய ஜவுளித்துறை செயலாளர் ஆய்வு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் நகரம் பல்லவர் காலபுராதன கற்சிற்பங்கள், குடைவரை மண்டபங்கள், கோயில்கள் நிறைந்த முக்கிய நகரமாக திகழ்கிறது. இங்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட கற்சிற்ப கூடங்கள் உள்ளன. மேலும், மாமல்லபுரம் சுற்று வட்டார பகுதிகளான பூஞ்சேரி, காரணை உள்ளிட்ட பகுதிகளில் கைவினை கிராமம் மேம்படுத்தப்படுகிறது. இந்த செயல்பாட்டை மத்திய ஜவுளி துறை அமைச்சக செயலர் உபேந்திர பிரசாத் சிங் நேற்று முன்தினம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சிற்ப கைவினை கலைஞர்களின் வீடுகளை மேம்படுத்த மத்திய கைவினை வளர்ச்சி வாரியம் கைவினை கிராமம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு வளர்ச்சி கழகமான (பூம்புகார் நிறுவனம்) ₹5.60 கோடி மதிப்பில் இதை அமைக்கிறது. மாமல்லபுரம் பூஞ்சேரி, காரணை ஆகிய பகுதிகளில் உள்ள சிற்ப கலைஞர்களின் வீடுகளை மேம்படுத்துவது, மாமல்லபுரத்தில் கைவினை கடைகள் முகப்பை அழுகுப்படுத்துவது, காரணையில் மழைநீர் வடிகால், அலங்கார வளைவு, சாலைகள் ஆகியவை மேம்படுத்தி கைவினை கிராமம் அமைக்கப்படுகிறது. இதற்கு காரணையில் ஒரு தெருவையே தத்தெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது….

The post மாமல்லபுரம் பகுதியில் மத்திய ஜவுளித்துறை செயலாளர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Central Textile ,Mamallapuram ,Mammallapuram ,Pallavar Kalapurathana ,Kuddavar ,
× RELATED மாமல்லபுரம் இசிஆரில் விபத்தை குறைக்க...