×

சிறு அசம்பாவிதங்கள் இன்றி விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பாக நடந்தது: போலீசாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு

சென்னை: சிறு அசம்பாவிதங்கள் இன்றி விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு நேற்று வெளியிட்ட அறிக்கை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த வருடம் தமிழக முழுவதும் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன. இறுதியில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலம் பாதுகாப்பு பணியில் 75,812 காவல் அதிகாரிகள், காவலர்களும் ஈடுபட்டனர். எப்போதும் இல்லாத வகையில் சிறு அசம்பாவித சம்பவங்கள் கூட இல்லாமல் மிகவும் அமைதியாக விநாயகர் சதுர்த்தி நிகழ்வு நடத்தி முடிக்கப்பட்டது.சென்னை காவல் ஆணையர், சட்டம் ஒழுங்கு காவல் துறை கூடுதல் இயக்குநர், அனைத்து காவல் ஆணையர்கள், மண்டல ஐஜிக்கள், சரக டிஐஜிக்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்கள் இப்பாதுகாப்புகளை முன்கூட்டியே திட்டமிட்டு சிறப்பாக செயல்படுத்தினர். அதோடு, பாதுகாப்பு பணிக்காக அழைக்கப்பட்ட காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் ஊர்காவல் படையினர் அனைவரும் பொறுப்புணர்வுடனும், அர்ப்பணிப்புடனும், எச்சரிக்கை உணர்வுடனும் இப்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.நுண்ணறிவு பிரிவின் கூடுதல் இயக்குநர் மற்றும் அவரது நுண்ணறிவு காவலர்களின் பங்களிப்பு சிறப்பாக அமைந்தது. இப்பாதுகாப்பு பணியில் தமிழக காவல்துறையினர் காட்டிய மன தைரியம், கடமை உணர்வு, தன்னடக்கம், பொறுமை போன்றவை எதிர்பால சந்ததியினர் கடைபிடிக்கும் வகையில் சிறப்பாக அமைந்தது.விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணியை திறம்பட மேற்கொண்டு, தமிழ்நாடு காவல்துறை பெருமை சேர்த்த அனைத்து காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் மற்றும் ஊர்காவல் படையினர் அகியோருூககு என் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post சிறு அசம்பாவிதங்கள் இன்றி விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பாக நடந்தது: போலீசாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Nayakar Chaturthi Festival ,DGB ,Sailendrababu ,Chennai ,Sailendra Babu ,Vivekar Chaturthi ,Vinayakar Chaturthi Festival ,
× RELATED கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரண...