×

சென்னையில் முதல்முறையாக சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி இன்று துவக்கம்

சென்னை: சென்னையை இந்தியாவின் விளையாட்டு மையமாக உருவாக்க தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டுவருகிறது. சென்னையில் நடத்தப்பட்ட செஸ் ஒலிம்பியாடை கண்டு உலகளவிலிருந்து வந்திருந்த வீரர், வீராங்கனைகள் எல்லாம் பிரமித்துவிட்டனர். இந்நிலையில், சென்னையில் முதல் முறையாக சர்வதேச பெண்கள் டென்னிஸ் தொடர் இன்று (திங்கள்) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஏ.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் தொடங்கி 18-ந்தேதி வரை நடக்கிறது. இந்த டென்னிஸ் திருவிழாவில் உலக தரவரிசையில் 29-வது இடம் வகிக்கும் அமெரிக்க வீராங்கனை அலிசன் ரிஸ்கே, 72-ம் நிலை வீராங்கனை வர்வரா கிராசெவா (ரஷியா), மேக்டா லினெட் (போலந்து), 2014-ம் ஆண்டு விம்பிள்டனில் இறுதிப்போட்டி வரை முன்னேறியவரான யூஜெனி புசார்ட் (கனடா), தாட்ஜனா மரியா (ஜெர்மனி), யானினா விக்மேயர் (பெல்ஜியம்), குவாங் வாங்க் (சீனா), ரெபக்கா பீட்டர்சன் (சுவீடன்), இந்தியாவின் அங்கிதா ரெய்னா, கர்மன் தண்டி உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் சார்பில் தமிழக அரசின் ஆதரவுடன் நடைபெறும் இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.2 கோடியாகும். இதில் ஒற்றையர் பிரிவில் மகுடம் சூடும் வீராங்கனைக்கு ரூ.25 லட்சமும், இரட்டையர் பிரிவில் வெற்றி பெறும் ஜோடிக்கு ரூ.9 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்….

The post சென்னையில் முதல்முறையாக சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி இன்று துவக்கம் appeared first on Dinakaran.

Tags : International Women's Tennis ,Chennai ,Government of Tamil Nadu ,India ,Olympiad ,First ,International Women's Tennis Tournament ,
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...