×

ஆவணங்களை ஆய்வு செய்யாமல் ஏற்பதாக புகார் சங்கங்களின் ஆவணங்களை கட்டாயம் ஆய்வு செய்ய வேண்டும்: பதிவுத்துறை ஐஜி உத்தரவு

சென்னை: பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டம் 1975ன் கீழ் பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வரும் சங்கங்களின் பதிவு தொடர்பாக சங்க பதிவாளர்கள் உரிய விதிமுறைகளை பின்பற்றாமலும் உரிய ஆவணங்களை ஆய்வு செய்யாமலும் ஏற்பதாக பல்வேறு புகார்கள் பதிவுத்துறைத் தலைவருக்கு வந்த வண்ணம் உள்ளன. எனவே, * நிர்வாகக்குழு மாற்றம் தொடர்புடைய படிவத்தில் இடம்பெற்றுள்ளவர்கள் மேற்படி சங்கத்தின் உறுப்பினர்களா என்பதற்கான உண்மைத்தன்மையை அறிய முந்தைய ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட படிவத்துடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட வேண்டும்.* சங்க துணை விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ள தேர்தல் தொடர்பான விதிகள் அதாவது, கூட்டத்திற்கான குறைவெண், உறுப்பினர்களின் வாக்களிக்கும் தகுதி மற்றும் இதர தேர்தல் தொடர்பான ஷரத்துக்கள் ஆகியவை பின்பற்றப்பட்டுள்ளனவா என்பது சரிபார்க்கப்பட வேண்டும்.* தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டம், 1975 பிரிவு 15ன் கீழ் நிர்வாகக் குழு தேர்வு குறித்து தேவைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளனவா என்பது பரிசீலிக்கப்பட வேண்டும். மேலும், சங்கப் பதிவாளர் தமிழ்நாடு சங்கங்கள் பதிவு விதிகள், 1978ல் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு குறைபாடுகள் எதுவுமின்றி இருப்பதை உறுதி செய்து  கொள்ள வேண்டும்.* புதிய உறுப்பினர் சேர்க்கை அல்லது உறுப்பினர் நீக்கம் தொடர்பான  படிவம் தாக்கல் செய்யப்பட்டால், சங்கத்தின் துணைவிதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டுள்ளதா என்பது சரிபார்க்கப்பட வேண்டும்….

The post ஆவணங்களை ஆய்வு செய்யாமல் ஏற்பதாக புகார் சங்கங்களின் ஆவணங்களை கட்டாயம் ஆய்வு செய்ய வேண்டும்: பதிவுத்துறை ஐஜி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : IG ,CHENNAI ,Registration Department ,Sivan Arul ,
× RELATED தமிழக – கேரள எல்லையில் மேற்கு மண்டல ஐஜி புவனேஸ்வரி ஆய்வு